உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு நோட்டீஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

விவசாயிகளுக்கு நோட்டீஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் என விவசாயிகளின் நிலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்துடன் காங்கிரஸ் அரசுக்கும், அவப்பெயரை ஏற்படுத்தியது.இதையடுத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். ஆனாலும், சில மாவட்டங்களில், விவசாயிகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதாக தகவல் வெளியானது.இந்நிலையில், வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர குமார் கட்டாரியா, அனைத்து மண்டல கமிஷனர்கள், கலெக்டர்களுக்குஅனுப்பியுள்ள கடிதம்:கர்நாடக வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என கூறி, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாக, முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு வந்தது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.கடந்த சில நாட்களாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசை திரும்ப பெற வேண்டும். அவர்களின் விவசாய நிலத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. முதல்வரின் உத்தரவை மீறி, நோட்டீஸ் அனுப்பினால், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை