மேலும் செய்திகள்
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
பெங்களூரு: உணவு விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட 127 பி.ஜி.,க்கள் எனும் தங்கும் விடுதிகளுக்கு உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடுத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கல்வி, பணி உட்பட, பல்வேறு காரணங்களால் சொந்த ஊரில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் பி.ஜி.,க்களில் தங்குகின்றனர். ஆயிரக்கணக்கான ரூபாய் முன்பணம் கொடுத்து, மாதந்தோறும் வாடகை செலுத்தித் தங்குகின்றனர்.ஆரம்பத்தில் சில நாட்கள் சுவையான உணவு வழங்கும் பி.ஜி.,க்கள், நாளடைவில் தரமற்ற, சுகாதாரம் இல்லாத உணவை வழங்குகின்றன. இதன் விளைவாக அங்கு தங்கியுள்ளோரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இத்தகைய பி.ஜி.,க்களுக்கு கடிவாளம் போட, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா முழுதும் பல்வேறு இடங்களில் உள்ள, 305 பி.ஜி.,க்களில், துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பல பி.ஜி.,க்களில் அரைகுறையாக வெந்த சப்பாத்தி, சாதம், புழுத்த தானியங்கள், காலாவதியான மசாலாக்களை பயன்படுத்தி, சுவையில்லாத உணவு வழங்குவது தெரிந்தது.இதுதொடர்பாக, 127 பி.ஜி.,க்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.நான்கு பி.ஜி.,க்களுக்கு 21,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியுள்ளவர்களுக்கு தரமான உணவு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
29-Oct-2024