உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.'ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்ட் எனப்படும் ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக' மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணை மணிக்கு 29 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஆக 20, 2025 22:15

நமது அரசியல்வாதிகள் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கென்ன, நாங்கள் எங்கள் பாட்டுக்கு சாதித்துக்கொண்டுதான் இருப்போம் என்று நமது விஞ்ஞானிகள் செயல்படுகிறார்கள். வாழ்த்துக்கள் அவர்களுக்கு.


naranam
ஆக 20, 2025 22:13

சபாஷ்! இதோடு நிறுத்திவிடாமல் பதினந்தாயிரம் கிமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவு கணைகளையும் இந்தியா தயாரித்து அவற்றைத் தயார் நிலையிலும் வைக்க வேண்டும்.


ManiMurugan Murugan
ஆக 20, 2025 21:20

அருமை நம்மை பயம் காட்டும் நாடுகளை நோக்கி நிறுத்த வேண்டும் வாழ்த்துக்கள்


SUBBU,MADURAI
ஆக 20, 2025 20:16

This aligns with Indias nuclear deterrence strategy against China, a shift from its earlier focus on Pakistan, as the Agni Vs range and canisterized, road mobile design detailed in a 2012 study by the Journal of Defense Studies enhance its survivability and rapid deployment compared to older tems like the Agni-III.


Palanisamy Sekar
ஆக 20, 2025 20:09

இந்த நாடு வல்லரசாக ஒரே காரணம் காங்கிரஸ் என்கிற ஊழல் கட்சியை இந்திய மக்கள் பதவியிலிருந்து துரத்தி அடித்தது தான் காரணம். மோடிஜின் அயராத உழைப்பும் தேசப்பற்றும் இப்படிப்பட்ட அக்னி ஏவுகணைகளை சோதித்து வெற்றி பெற வைக்கின்றன. இன்னும் சில மாநிலங்களில் உள்ள ஊழல் ஆட்சிகளை மக்கள் தூக்கி எறிந்துவிட்டால் போதும் இன்னும் நமது தேசம் ஜொலிக்கும் என்பதை உறுதிபட கூறுவேன். மிகசிறந்த விஞ்ஞானிகளை ஊக்குவித்து நாட்டை உலகத்தின் முதன்மை நாடாக உயர பாடுபடுகின்ற பாஜக ஆட்சி நாடுமுழுக்க வரவேண்டும். அக்னி 5 ஏவுகணையை உருவாக்கி சோதனையில் வெற்றிபெற பாடுபட்ட அணைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்


SANKAR
ஆக 20, 2025 22:02

Agni as part of IGMDP started in 1983.What you see is gradual development to this stage over 4 decades plus.Agni I tested in 1989 had a range of 1200 km and can carry a nuclear pay load.


S.L.Narasimman
ஆக 20, 2025 19:49

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை