வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமெரிக்காவில் செய்த கோல்மால் அங்கேயும் செய்யாமல் இருந்தால் நிலைத்து இருக்கலாம்,
இந்தியர்கள் புகழ் உலகம் முழுவதும் உள்ளது. ஜெய்ஹிந்த்
புதுடில்லி: ஜெர்மனியில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த ஜெர்மன் தேசிய தின நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஆதரவான ஜெர்மனியின் நிலைப்பாட்டிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பதில் இணை அமைச்சர் ஜோஹன் உறுதியாக இருந்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. உலக விவகாரங்களில் நாம் ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தில் இருக்கிறோம்.பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து வருகிறது. உலகளாவிய அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு நமது இரு நாடுகளும் ஒரு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளன.ஜெர்மனி, இந்தியா ஆகிய இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் நிலையான வளர்ச்சியைக் கவனிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெர்மன் நிறுவனங்கள் பல தசாப்தங்களாக இங்கு உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான நமது தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு ஜெர்மனியும் முக்கியமானது. ஜெர்மனியில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
அமெரிக்காவில் செய்த கோல்மால் அங்கேயும் செய்யாமல் இருந்தால் நிலைத்து இருக்கலாம்,
இந்தியர்கள் புகழ் உலகம் முழுவதும் உள்ளது. ஜெய்ஹிந்த்