வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Congratulations to ISRO and Central Government.
பாராட்டுக்கள்.... வெளிநாட்டின் சேவையை கைவிட்டுவது மிகவும் நல்லது
-நமது நிருபர்-இஸ்ரோ இன்று (அக்டோபர் 30) இரவு 11:51 மணிக்கு, இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், என்விஎஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக உருவான இந்தியாவின் 'நேவிக்' நெட்வொர்க்கில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, துல்லியமான இருப்பிடச் சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த செயற்கைக்கோளில் அகமதாபாத் இஸ்ரோ மையத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இது பொதுமக்களின் இருப்பிடச் சேவை, பேரிடர் மேலாண்மை, ரயில்வே போக்குவரத்து மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்புத் தேவைகளுக்கு பெரிதும் பயன்படும். செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Congratulations to ISRO and Central Government.
பாராட்டுக்கள்.... வெளிநாட்டின் சேவையை கைவிட்டுவது மிகவும் நல்லது