உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸாப்பில் போதை பொருள் ஆர்டர் செய்த அதிகாரி கைது

வாட்ஸாப்பில் போதை பொருள் ஆர்டர் செய்த அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: மும்பையைச் சேர்ந்தவரிடம் வாட்ஸாப் வாயிலாக, 5 லட்சம் ரூபாய்க்கு கோகைன் போதைப் பொருள் ஆர்டர் கொடுத்த ஹைதராபாதைச் சேர்ந்த பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். அவருடன், போதை பொருளை டெலிவரி செய்தவரும் கைதானார்.தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், டாக்டர் நம்ரதா சிகுருபதி, 34. ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் பகுதியைச் சேர்ந்தவர்.போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், ஆறு மாதங்களுக்கு முன் தன் பணியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வாட்ஸாப் வாயிலாக கோகைன் போதைப் பொருளை ஆர்டர் செய்து, டெலிவரி பெற்றபோது போலீசாரிடம் நேற்று சிக்கினார்.போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்த நம்ரதாவுக்கு, மும்பையைச் சேர்ந்த ஆன்லைன் போதைப் பொருள் வியாபாரி வான்ஸ் தாக்கர் என்பவரை ஏற்கனவே தெரிந்திருக்கிறது. எனவே, வான்ஸ் தாக்கரிடம் வாட்ஸாப் வாயிலாக 5 லட்சம் ரூபாய்க்கு கோகைன் அனுப்பும்படி ஆர்டர் கொடுத்த நம்ரதா, அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினார். இதையடுத்து, பாலகிருஷ்ணன் என்பவர் வாயிலாக நம்ரதாவுக்கு கோகைனை வான்ஸ் அனுப்பி வைத்தார்.இந்நிலையில், நம்ரதாவின் சொந்த ஊரான ராயதுர்கத்தில் உள்ள வீட்டுக்கு, கோகைன் எடுத்துச் செல்லப்படும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை, நம்ரதாவின் வீட்டில் கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.இருவரையும் கைது செய்ததோடு, 53 கிராம் கோகைன், இரண்டு மொபைல் போன்கள், 10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.நம்ரதாவை விசாரித்தபோது, போதைப் பொருளுக்காக மட்டும், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganapathy
மே 12, 2025 12:22

இஸ்லாமிய முறையில் தண்டனை வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 08:58

ஒரு கடினமான உயர் பொறுப்பில் இருந்தவர் இப்படிக் கீழே இறங்குவாரா? கார்ப்பரேட் உலகில் ஒரு பெண் சாதிப்பது மிக அரிது.. சராசரிப்பெண்களால் முடியாத செயல்.. அப்படி இருந்தவர் இப்படி இறங்க வாய்ப்பே இல்லை.. இவரைப்பத்தி இவ்ளோ தகவல் வருது .... மருந்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தவன், வித்தவன் இவனுங்க விசயமே வெளியே வரலையே ?? என்ன மர்மம் ??


VENKATASUBRAMANIAN
மே 12, 2025 08:05

இதுதான் பெண்ணுரிமை. பாவம் இவர்


Kasimani Baskaran
மே 12, 2025 05:40

ஒருவரிடம் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் பணம் கறக்க முடிகிறது என்றால் போதை வர்த்தகத்தின் அளவை யூகிக்க முடிகிறது. இதை புரிந்து கொண்டுதான் அயலக அணி மூலம் போதைப்பொருள் கடத்தி திராவிடர்கள் சொகுசாக அனுபவிக்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால் அத்தனை பணமும் தீவிரவாதத்துக்குத்தான் போகிறது. இது போன்று பணம் வரும் பட்சத்தில் அணுகுண்டு கூட வாங்க முடியும். ஆகவே தேசநலன் கருதி போதைப்பொருள் கடத்தும் தகவல் கிடைத்தால் உடனே என் ஐ ஏ வை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யுங்கள். தேசம் காப்போம்.


Mani . V
மே 12, 2025 04:33

இந்த தறுதலை டாக்டரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை