உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்

பாலக்காடு; கேரளாவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43. இவர், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த அக்., 29ம் தேதி, பாலக்காடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஒற்றைப்பாலத்தில் மணிகண்டன் வசித்த வாடகை வீட்டில், சோதனையிட்டபோது கணக்கில் வராத, 1.9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சம்பாதித்ததாக கூறி, மணிகண்டன் மீது கோழிக்கோடு லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவில், வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிகண்டனை, சஸ்பெண்ட் செய்து கேரள மாநில போக்குவரத்து ஆணையர் நாகராஜு சக்கிலம் உத்தரவிட்டுள்ளார்.இவர், ஆடு 2, ஜானகீஜானை, அஞ்சாம்பாதிரா உட்பட மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.Thangarajan
டிச 06, 2024 13:53

தலைப்பை பார்த்ததும் தமிழ்நாட்டில் என்று பார்த்தேன், அதுதான் இல்லை இது கேரளாவில் தமிழ்நாட்டில் பணியிடமாற்றம் தானே?


rasaa
டிச 05, 2024 13:44

அப்படிபார்த்தால் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையுமே சஸ்பெண்ட் செய்யவேண்டும். அத்தி பூத்தது போல் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.


panneer selvam
டிச 04, 2024 15:19

Poor guy being suspended just because of accumulation of wealth in Kerela , if he worked in Tamilnadu , he will be shifted from one place to another place . No other punishment will be envisaged due to his loyal service to ruling parties .


சமீபத்திய செய்தி