மூழ்கிய கப்பல் எண்ணெய் கசிவு
மும்பை: மும்பை கடற்பகுதியில் மூழ்கிய எம்.வி. ராக் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1.5 முதல் 2 டன் என்ற அளவில் இந்த எண்ணெய் கசிவு இருப்பதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சமுத்ரா பிரஹரி என்ற கப்பலில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.