உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒற்றை படத்தால் வெடித்தது சண்டை; ஓலாவுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய காமெடி நடிகர்!

ஒற்றை படத்தால் வெடித்தது சண்டை; ஓலாவுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய காமெடி நடிகர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல நடிகரின் சமூக வலைதள பதிவால் பிரபலமான ஓலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்திருப்பது அந்நிறுவனத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.ஓலா ஸ்கூட்டர்கள் சர்வீஸ் சென்டரில் அழுக்கு படித்து குப்பை போல குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த காமெடி நடிகர் குணால் கம்ரா, ' இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள், குரல் கொடுக்க எல்லாம் மாட்டார்கள். பைக் என்பது தினசரி ஊழியர்களின் வாழ்வாதாரம்,' எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, ஓலா சர்வீஸில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், இங்கே டேக் செய்து, அது பற்றி சொல்லுங்கள் என்றும் பதிவுட்டிருந்தார். மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வாலையும் டேக் செய்திருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான பவிஷ் அகர்வால், ' உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், இங்கே வந்து உதவி செய்யுங்கள். உங்களின் தோல்வியடைந்த காமெடி வாழ்க்கை சம்பாதிக்கும் பணத்தை விட கூடுதலாக பணம் தருகிறேன். அப்படியில்லை எனில் அமைதியாக உட்காருங்கள், வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு எங்களை கவனம் செலுத்த விடுங்கள்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நடிகர் குணால் கம்ரா மற்றும் பவிஷ் அகர்வாலுக்கு இடையே தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் நீடித்து வந்தது. தொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் ஓலா ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரையிலான வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பவிஷ் அகர்வாலும், நடிகர் குணால் கம்ராவும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஓலா குறித்து நடிகர் குணால் கம்ரா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை குவித்து வரும் நிலையில், ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இது ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வாலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Suppan
அக் 10, 2024 16:03

சென்னை போன்ற நகரங்களில்தான் ஓலா ஓட்டுனர்கள் ஒரு பிரச்சினை. ஆட்டோக்காரர்கள் மாதிரிதான். "மேல போட்டு குடு", கேன்சல் செய் , அந்த ரேட்டுக்கு வர்றேன், கேஷா குடு" இதெல்லாம் சென்னை வரும்பொழுது அனுபவித்து இருக்கிறேன். மும்பை போன்ற நகரங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.


Lion Drsekar
அக் 08, 2024 10:12

தனி ஒருவரால் இது நிகழ்ந்து இருக்க வாய்ப்பே இல்லை, இன்றைக்கு பல இடங்களில் கார் மற்றும் இரு சக்கர வானங்களை பழுப்பார்க்கும் வானங்களை விற்ற கம்பெனிகள் பில்லை மட்டும் போடுகிறார்கள் ஆனால் அதற்குண்டான சேவை இல்லை என்பதை அறிந்து சிலர் நேரில் சென்று சண்டையிட்டு நிரூபித்து பணத்தித் திரும்பப்பெறுகிறார்கள், சிலர் வழக்கு தொடுக்கிறார்கள், சிலர் தனியாரிடம் செல்கிறார்கள், வீட்டுக்கு வீடு வாசற்படி, வந்தே மாதரம்


சாண்டில்யன்
அக் 08, 2024 09:09

இதில் ஏன் நிதின் கட்கரி பேர் வந்தது சம்பந்தமிருக்கோ


Selvaraj Mani
அக் 08, 2024 07:05

Dont buy ola scooter no service no response


நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 05:52

பவிஷ் அகர்வால் , மற்றும் எனது மாநில முதல்வர் என்று கம்பேர் செய்தால் இருவரும் ஒருவரே என்று தான் தோன்றுகிறது , உங்களுக்கு?


narayanansagmailcom
அக் 07, 2024 22:41

ஓலா ஒரு பிராடு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் பறிக்கிறார்கள். ஓலா டிரைவர்களும் அப்படி தான். ஓலா மக்களுக்கு தலைவலி நிறுவனம்


தாமரை மலர்கிறது
அக் 07, 2024 22:35

ஓலா தலைவர் அகர்வால் காமெடிக்காரர்களுடன் பதிலடி சண்டைபோட்டு கொண்டிருப்பது, பெருத்த அவமானம். பன்னியுடன் மோதினால், மனிதனுக்கு தான் நஷ்டம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 21:49

ஓலா ஸ்கூட்டர் படு மோசம். கறிகா வாங்க வாட்சமேன் உபயோகத்துக்கு என்று வாங்கினது. வாட்ச்மனிடம் கொடுக்கும் முன், வாங்கின 3 ஆம் நாளே, டெட் ஆகிவிட்டது. பாடையில் போட்டு, சாரி, பெட்டி ஆட்டோவில் போட்டு கொண்டு போய் ஓலா சர்விஸ் சென்டரில் கொடுத்திருக்கிறோம். 20 நாளாச்சு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை