உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனையில் வெள்ளம் வடிந்ததால் பழைய ரயில் பாலம் மீண்டும் திறப்பு

யமுனையில் வெள்ளம் வடிந்ததால் பழைய ரயில் பாலம் மீண்டும் திறப்பு

புதுடில்லி:யமுனை நதியில் வெள்ளம் வடிந்த நிலையில், பழைய ரயில்வே பாலம் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது. டில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால் யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டில்லி பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், யமுனையில் வெள்ளம் வடிந்ததால், பழைய ரயில்வே பாலம் நேற்று முன் தினம் இரவு வாகனப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இதனால், வடகிழக்கு மற்றும் வடக்கு டில்லிக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல, மத்திய டில்லியின் சில பகுதிகளுக்கு செல்வோருக்கும் பயணம் மீண்டும் எளிதாகி இருக்கிறது. பாலம் மூடப்பட்டதால் வஜிராபாத் வழியாக மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ