உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை: டி- சர்ட் அணிந்து வந்த தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சில எம்.பி.,க்கள் அவையின் கண்ணியத்தை பேணுவதில்லை. வாசகத்துடன் டி- சர்ட் அணிந்து வந்தால், இந்த அவை செயல்படாது' என தி.மு.க., எம்.பி.,க்களை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார்.லோக்சபாவிற்கு பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசை விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்திருந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அந்த எம்.பி.க்களை கண்டித்தார். அவையை ஒழுங்காக நடத்த விரும்பினால் சரியான ஆடையில் வருமாறு கேட்டுக் கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7qhm0xhz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது ஓம்பிர்லா கூறியதாவது: சில எம்.பி.க்கள், அவையின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பேணுவதில்லை. டி-சர்ட் அணிவது பார்லிமென்ட் ஒழுக்கத்தை மீறுவதாகும். சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிய, பார்லிமென்ட்டின் விதி 349ஐ படிக்க வேண்டும்.நீங்கள் டி-சர்ட்டை அணிந்து, அதில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தால், அவை (லோக்சபா) செயல்படாது. நீங்கள் டி-சர்ட்டைக் மாற்றி சரியான உடையில் வந்தால் மட்டுமே, அவை செயல்படும். இவ்வாறு ஓம் பிர்லா கோபத்துடன் தெரிவித்தார். நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து லோக்சபாவிற்கு தி.மு.க., வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

sankar
மார் 21, 2025 17:58

அவைக்காவலர்களை வைத்து அவர்களை வெளியே துரத்துங்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே கிளப்புகிறார்கள், நியூசென்ஸ் & நான்சென்ஸ் பீப்பிள்


K.SANTHANAM
மார் 21, 2025 15:54

மத்திய அரசு தூங்கியது போதும் விழிக்க வேண்டும். இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் இவர்களுடைய கட்சியை தடை செய்ய வேண்டும்.


Saravanaperumal Thiruvadi
மார் 21, 2025 15:40

நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்


venugopal s
மார் 21, 2025 10:59

கருத்துக் கதறல்கள் செம காமெடியாக உள்ளது!


raja
மார் 21, 2025 09:01

அவனுங்க தனி மனித ஒழுக்கத்தையே பேணுவதில்லை அப்புறம் எப்படி? அவனுங்க எண்ணமெல்லாம் தமிழ் நாட்டை பிரித்து ..நாடா மாத்தணும்


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 07:20

நாகரீகம் மிகுந்த தமிழக M P க்கள் அடுத்தபடியாக பேண்ட் மேலே ஜட்டி மாட்டி சூப்பர் மேன் ஸ்டைல வருவதற்கு திட்டம் போட்டு உள்ளனர்.


karthik
மார் 21, 2025 06:19

பெரிய லட்சியவாதீங்க - ஒண்ணுக்கும் உதவாத ட்ராவிடியாகள். இந்த லட்சணத்துல இங்க தமிழ்நாடு வேல்முருகன் அவை கண்ணியத்தை பேணுவதில் குறை கண்டுபிடிக்கிறார் .


PARTHASARATHI J S
மார் 21, 2025 05:32

யாராவது சொல்லுங்கள். தொகுதிப்பிரச்னை பற்றி பேச அனுப்பினால், இவர்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறார்கள். தினம் தினம் புதுசு புதுசா தொல்லை கொடுப்பதே இவர்கள் வேலை. அவையை விட்டு வெளியேற்றி ஆறுமாசம் சஸ்பெண்ட் செய்யவும்.


எவர்கிங்
மார் 21, 2025 02:33

கோவணம் என்கிற தண்டு தாங்கி அணிந்து வருவது கூட எங்கள் உரிமை என தீராவிடியா ஸ்டாக்குகள் கூவுவானுங்களே


Mahendran Puru
மார் 21, 2025 01:31

ராகுல் காந்தி பேச எழுந்தால் மூஞ்சியை சுருக்குவதும் நிம்மியும் பிரதானும் அகங்காரமாய் கத்துவதை ரசிப்பது இந்த மனிதருக்கு கண்ணியமாம். வேடிக்கை வினோத மனிதர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை