உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

சண்டிகர்: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று (டிச.,20) மாரடைப்பில் காலமானார். அவருக்கு வயது 89.இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவர் மற்றும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவருக்கு வயது 89. இவர் முன்னாள் துணை பிரதமரும், ஹரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்களில் ஒருவர். சவுதாலா, 4 முறை ஹரியானா மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று (டிச.,20) கர்னாலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.சவுதாலா, ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டு காலம் சிறை தண்டனைக்கு ஆளானவர்; அந்த வழக்கில் ஜாமினில் வெளியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பார்வதி
டிச 20, 2024 19:03

அரசியல்வாதிகளுக்கு பிரத்யேகமாக நாக்பூரில் பெரிய சிறை அமைத்தால் நல்லது.


Sidharth
டிச 20, 2024 16:34

இவரு ஜிக்கு நண்பனா எதிரியான்னு தெரியாம சங்கிங்க திணறல்


V வைகுண்டேஸ்வரன் , chennai
டிச 20, 2024 19:06

சித்தார்த் ரொம்ப சரி. ஊழல் வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர். கட்டுmaram


Bhakt
டிச 20, 2024 19:25

கட்டுமரத்துக்கு படா தோஸ்த்


N.Purushothaman
டிச 20, 2024 15:34

தண்டிக்கப்பட்ட ஊழல்வாதி ஒருவர் மறைந்தார் .....ஆழ்ந்த இரங்கல்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை