உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடுப்புச்சுவர் ஏறி குதித்து சமாதியில் ஒமர் அஞ்சலி

தடுப்புச்சுவர் ஏறி குதித்து சமாதியில் ஒமர் அஞ்சலி

ஸ்ரீநகர்; ஜம்மு - காஷ்மீரை மஹாராஜா ஹரி சிங் ஆட்சி செய்தபோது, 1931ல் ஏற்பட்ட கிளர்ச்சியில் 22 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஸ்ரீநகரில் சமாதிகள் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூலை 13ம் தேதியை, தியாகிகள் நினைவு தினமாக தேசிய மாநாட்டு கட்சி உட்பட பல்வேறு இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. இந்நிலையில், தியாகிகள் சமாதிக்கு தன் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்த, முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று முயன்றார். சமாதி இருக்கும் பகுதிக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்ததால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையை மீறி தொண்டர்களுடன் நுழைய ஒமர் முயன்றார். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, ஒமர் அப்துல்லா தடுப்புச்சுவர் மீது ஏறி குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் ஏறி குதித்துச் சென்றனர். அதன்பின் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஒமர் அப்துல்லா பதிவிட்டுள்ளதாவது:தியாகிகளின் சமாதிக்குச் செல்ல விரும்புவதாக, கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினமே தெரிவித்தேன். சில நிமிடங்களில், என் வீட்டைச் சுற்றி தடுப்பு வேலி போடப்பட்டது. அது நள்ளிரவு வரை இருந்தது. இது ஒரு சுதந்திர நாடு என அவர்கள் கூறுகின்றனர்; ஆனால், சில சமயங்களில் நாங்கள் அவர்களின் அடிமைகள் என நினைக்கின்றனர். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல; எவ்வளவு காலம் அவர்கள் எங்களை தடுப்பர்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை