உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா

காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர் : மாநில அந்தஸ்தில் இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் முதலாவது முதல்வராக, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று பொறுப்பேற்றார். பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த ஜம்மு பிராந்தியத்தில், அக்கட்சியின் தலைவரை தோற்கடித்த சுரேந்தர் சவுத்ரி துணை முதல்வராக பதவி ஏற்றார். கடந்த 2019ல் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இதில், ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின், முதல் முறையாக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. சுயேச்சைகள் நான்கு பேர் வென்றனர். அவர்கள் தேசிய மாநாடு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வராக ஒமர் அப்துல்லாவுக்கு துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். காஷ்மீரைச் சேர்ந்த ஷாகினா மசூத், ஜாவேத் தர், ஜம்முவைச் சேர்ந்த சுரேந்தர் சவுத்ரி, ஜாவேத் ராணா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இடம் தருவதாக ஒமர் கூறியிருந்தார். ஆனால், ''ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்டுத்தர போராட வேண்டியிருப்பதால், இப்போதைக்கு அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்,'' என காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.துணை முதல்வர் சுரேந்தர் முன்பு பாரதிய ஜனதாவிலும், மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியிலும் இருந்தவர். ஜம்மு பிராந்தியத்தில் தேசிய மாநாடு தரப்பில் வெற்றி பெற்ற ஒரே ஆள் இவர் தான். ''புதிய அரசில், ஜம்முவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என யாரும் நினைக்கக் கூடாது என்பதால், அங்கிருந்து துணை முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த அரசு தங்களுடையது என்பதை ஜம்மு மக்கள் உணர வேண்டும்,'' என்றார், ஒமர் அப்துல்லா. காங்., தலைவர்கள் கார்கே, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், ராஜா, தி.மு.க.,வின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹ்பூபா முப்தி விழாவில் பங்கேற்றனர். அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, மத்திய அரசு அவருடன் இணைந்து செயலாற்றும் என உறுதி கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு ஏற்கனவே தனி சட்டம் இருந்தது. கடந்த 2009ல், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக ஒமர் பதவியேற்ற போது, 'ஜம்மு - காஷ்மீர் மாநில அரசியலமைப்பு சட்டத்தின்படி' என கூறி, பதவியேற்றார். தற்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டதால், நேற்று பதவியேற்கும்போது, 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி' என கூறி, பதவியேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 16:32

காங் க்ராஸ் .. மைண்ட் வாய்ஸ் .. எங்களுக்கு அழுகுணி ஆட்டம் ஆடித்தான் பழக்கம். நீங்க நேர்மையாக இருக்கச்சொன்ன எப்படி.? இது எங்களுக்கு ஒவ்வாது ராவுளும் எக்காரணம் கொண்டும் ஒத்துக்கவேமாட்டார். அவருக்கு பிடித்தது பிடிவாத மற்றும் கொனஷ்டை அரசியலே ..


jagadeesan Gopalaswamy naidu
அக் 17, 2024 14:31

பொருள்: காங்கிரஸில் காந்தி குடும்பத்தின் பங்கு மற்றும் ஜனநாயக கொள்கைகள் பற்றிய கவலைகள் அன்புடையீர் / மேடம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காந்தி குடும்பத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து, குறிப்பாக காஷ்மீரில் அரசாங்கம் அமைக்கும் விழா போன்ற சமீபத்திய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில், எனது கவலைகளை வெளிப்படுத்த நான் இதை எழுதுகிறேன். இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு வளமான பாரம்பரியம் உள்ளது என்பது உண்மைதான் என்றாலும், ஒரு குடும்பத்திற்குள் அதிகாரம் மையப்படுத்தப்படுவது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தின் நிலை மற்றும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறைகளில் அதன் பரந்த தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று நான் நம்புகிறேன். காஷ்மீர் போன்ற பிராந்தியங்களில் கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் தலைமைப் பாத்திரங்கள் உள்ளிட்ட முக்கியமான அரசியல் முடிவுகளில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரமாக பங்கேற்பது, அனைவரையும் உள்ளடக்கிய கட்சி இயக்கவியலை விட குடும்பம் தலைமையிலான முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கைக் குறிக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள மற்ற திறமையான மற்றும் தகுதியான தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதற்கு அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்கள் வழங்கப்படுவதற்கு வழிவகுத்தது, இது இறுதியில் அமைப்புக்குள்ளேயே ஜனநாயக விழுமியங்களை ஊக்கப்படுத்துகிறது. அரசியல் கட்சிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது, குறிப்பாக இந்தியா போன்ற பன்முகத்தன்மை மற்றும் சிக்கலான ஒரு நாட்டில். ஒரு குடும்பம் முடிவெடுப்பதில் ஆதிக்கம் செலுத்தும்போது, அது மற்ற குரல்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது, மேலும் தகுதி மற்றும் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகள் சமரசம் செய்யப்படுகின்றன. இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நம் நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஏனெனில் அரசியல் பன்முகத்தன்மை செயல்படும் ஜனநாயகத்திற்கு முக்கியமானது. மேலும், காஷ்மீர் போன்ற பகுதிகளில் அரசாங்கம் அமைப்பது போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் காந்தி குடும்பத்தின் தலையீடு மேலும் கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய முக்கியமான பிராந்தியங்களில் தலைமைத்துவம் குடும்ப அல்லது மையப்படுத்தப்பட்ட அதிகார கட்டமைப்புகளால் பாதிக்கப்படாமல், ஒருமித்த கருத்து, உள்ளடக்கம் மற்றும் உள்ளூர் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது முக்கியம். ஒரு அக்கறையுள்ள குடிமகனாக, காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து, கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் ஜனநாயகம் அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்பு என்ற அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது, மேலும் அரசியல் அமைப்புகள் இந்த மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்த முக்கியமான விஷயத்தில் உங்கள் நேரத்திற்கும் கருத்தில் கொண்டதற்கும் நன்றி. இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்தும், ஆரோக்கியமான ஜனநாயக சூழலை வளர்ப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு குறித்தும் சிந்தனைமிக்க உரையாடலை இந்த கடிதம் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.


krishnamurthy
அக் 17, 2024 17:44

சரியான கருது . காங்கிரெஸ்ஸை சேர்க்காதது நல்லதே. போலி காந்திகளின் கட்சியை நம்பவும் கூடாது


Sridhar
அக் 17, 2024 12:12

ஜம்மு தனிப்பகுதியாகவேண்டும். காஷ்மீருக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும். அங்குள்ள மக்களை உழைத்து வாழ வலியுறுத்த வேண்டும்.


ராமகிருஷ்ணன்
அக் 17, 2024 12:08

காஷ்மீர் முஸ்லிம்கள் பி ஜே பி யை புரிந்து கொண்டனர். மற்ற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஒழிந்தால் தான் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு புத்தி வரும்.


Indian
அக் 17, 2024 13:47

உனக்கு நல்ல புத்தி இல்லை , அதான் இப்படி எழுதுகிறாய் ?


Mettai* Tamil
அக் 17, 2024 11:46

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி என கூறி, பதவியேற்றார். நேருவின் தவறான முடிவால், இப்படி சொல்வதற்கு 77 வருடங்கள் ஆகி விட்டது... இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் தியாகம் என்றும் நிலைத்திருக்கும் பாரத மைந்தர்களின் மனதில் .......


ganapathy
அக் 17, 2024 11:15

ஆமாமா காங்கிரஸுக்கு எப்படியாவது மொத்த காஷ்மீரையும் இவனோட நேரு சொன்ன மாதிரி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் சரிபாதியா பிரிச்சு கொடுக்குற முக்கிய வேலை பாக்கி இருக்குல்ல. இன்னிக்கி அங்க தேர்தல் நடப்பதே பாஜக மத்திய அரசாக இருப்பதால் தான். இங்க துன்னுவோம் ஆனா ஓட்டு மட்டும் நாங்க பாகிஸ்தானிய ஆதரவு முஸ்லீமுக்குதான் போடுவோம்...எப்படியோ நாசமா போங்கடா.


nv
அக் 17, 2024 11:09

ஆறு இடம் கிடைத்ததே இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை.. வாங்கிகிட்டு சும்மா ஓரத்தில் நிற்பது தான் அழகு!


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:57

சுயேச்சைகளின் ஆதரவு இருப்பதால் காங்கிரசின் ஆதரவு அவர்களுக்குத் தேவையில்லை.. காங்கிரசின் அடங்காத் திமிருக்கு பலத்த அடி....


Mohamed Younus
அக் 17, 2024 10:16

காஷ்மீரில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. சில சில பிரச்சனைகள் இருந்தாலும் முஸ்லிம்கள் இந்தியாவில் முழு உரிமைகளுடன் வாழ முடியும். இங்குள்ள ஆட்சி எதிராக இருந்தாலும் இழந்த உரிமைகளை சட்ட போராட்டம் மூலம் மீட்க முடியும் என்பது போன்ற நம்பிக்கைகள் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு உள்ளது .


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 11:01

முஸ்லிம்கள் இந்தியாவில் முழு உரிமைகளுடன் வாழ முடியும் .. முற்றிலும் உண்மை.. முஸ்லிம்களுக்கு பெரும்பான்மையினருக்கே கூட கிடைக்காத பல சலுகைகளும், உரிமைகளும் கிடைக்கின்றன .. ஹிந்துத்வா பேசும் பாஜக ஆட்சி செய்தாலும் கூட இரண்டாம்தரக் குடிகளாக வாழ்பவர்கள் பெரும்பான்மையினரே... உலகில் வேறு எங்கும் இந்த பேரவலம் கிடையாது.....


ganapathy
அக் 17, 2024 11:09

என்ன உரிமை உனக்கு இல்லை? மொத்த முஸ்லீம்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வரும்போது இன்னும் என்ன உரிமை வேண்டும்? பாதாள உலகில் மட்டுமே இன்னும் சலுககைகள் கொடுக்க முடியும். ஏற்கனவே பல லட்சக்கணக்கான பரப்பளவிலான நிலம் உங்க பிணங்களை புதைக்க ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மீதி உன்னோட வக்ஃப் கைல. இன்னும் என்ன? அப்ப உங்களுக்குள்ள ஜாதிப்பிரிவினைப்படி கோட்டா கொடுத்தா ஒத்துக்குவியா?


RAJ
அக் 17, 2024 08:20

நீ அமைச்சரவைல இருந்துமட்டும் என்னத்த கிழிக்கப்போற.. எப்பவும் போல ஒப்புக்கு சப்பானிய ஓரமா நில்லு.. முதல்வரை ஒருத்தர் ஜெயிலிருந்து தோற்கடிச்ச விழுப்புண் இன்னும் ஆறல.. அதுக்குள்ள பல்லை இளிச்சுகிட்டு பட்டாபிஷகம்.. ... ஹிஹிஹி


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 09:54

பல்லுபுடுங்கிய ராவுளுக்கு அநேக பரிதாபங்கள் ராசு. இப்படித்தான் எல்லா தேர்தலிலும் தோற்றுபோய்ட்டு செல்லாக்காசாக வீதிவீதியாக நடமாடும் நாள் வெகுதொலைவில் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 11:03

இப்படித்தான் எல்லா தேர்தலிலும் தோற்றுபோய்ட்டு செல்லாக்காசாக வீதிவீதியாக நடமாடும் நாள்? இப்படி தலை கொழுத்து ஆடியதால் தான் மக்களவைத் தேர்தல் மூலமாக உ பி யில் பேரிடி.. நினைவிருக்கட்டும். ஹிந்துக்கள் பாஜகவின் பர்பாமென்ஸ் பார்த்து வாக்களிக்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தினர் அப்படி அல்ல. முழுக்க முழுக்க மதம் சார்ந்தே வாக்களிக்கிறார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை