உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ., 30ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுத்தது வானிலை மையம்!

நவ., 30ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுத்தது வானிலை மையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று 20 செ.மீ., மேல் மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. 'பெங்கல்' புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும். இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அன்று 20 செ.மீ., மேல் மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29, 30ம் தேதிகளில் தமிழக வட மாவட்டங்களில் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pandianpillai Pandi
நவ 28, 2024 13:42

வரும் ஆனா வராது . தம்பி அந்த வாபஸ் சட்டை ரெடியா இருக்குல்ல . ஒத்த கரை கூட இருக்க கூடாது.


Ramaswamy Jayaraman
நவ 28, 2024 13:30

நமது வானிலை மையம் சொல்வது என்றுமே சரியாக இருந்தது கிடையாது. அவர்கள் காட்டும் வானிலை படத்திற்கும் நடைமுறையும் என்றுமே சரியில்லை.


கனோஜ் ஆங்ரே
நவ 28, 2024 12:17

இதுமாதிரி பயமுறுத்தி, பயமுறுத்தியே... “பதட்டத்திலேயே” வச்சிருங்க மக்களை...? பிபிசி வெதர்.. சைட்டில் பார்த்தேன்.. அது புயலாகவே மாறவில்லை... காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கிறது... நேற்றுக்கு முந்தைய நாள்... நாளை இவ்வளவு மழை பொழியும், அவ்வளவு மழை பொழியும்..னு புளுகுனாங்க... சைட்டில் போய் பார்த்தால்... அந்த அடர் மேகக்கூட்டம் கலைஞ்சு... வடக்கு நோக்கி, மேற்கு வங்க திசையை நோக்கி நகர ஆரம்பிச்சுடுச்சு... ஆனால், டிவி..ல பார்த்தா, இதோ இன்னைக்கு வருது... நாளைக்கு வருது புயல்...னு புளுகுறானுங்க...? நல்லா பீதிய களப்புறானுங்கப்பா...?


Ambalan
நவ 28, 2024 12:00

இலவு காத்த கிளியாய் ..


Ambalan
நவ 28, 2024 12:01

கோவிந்தா கோ..விந்தா


Ambalan
நவ 28, 2024 11:58

சும்மா சார்...