ஒரு நாடு; ஒரு கணவர் திட்டமா?
'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பா.ஜ., ஓட்டு சேகரிக்கிறது. 'சிந்துார்' என்பதை பா.ஜ.,வினர் நகைச்சுவையாக மாற்றி விட்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும், குங்குமத்தை அவர்கள் அனுப்பி வருகின்றனர். அதை பிரதமர் மோடி பெயரில், பயன்படுத்துவீர்களா? இது 'ஒரு நாடு; ஒரு கணவர்' திட்டமா?பகவந்த் சிங் மான்பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மிநல்ல அறிகுறி!பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகும், கீர் பவானி கோவில் திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.மனோஜ் சின்ஹாதுணைநிலை கவர்னர், ஜம்மு - காஷ்மீர்பலன்கள் மட்டும் அதானிக்கு!பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., மக்களின் காப்பீட்டு பிரீமியங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்ட, 5,000 கோடி ரூபாய் நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. பணம், பாலிசி, பிரீமியம் மக்களுடையது. ஆனால், பாதுகாப்பு, வசதி, பலன்கள் எல்லாம் அதானிக்கு.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,