உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிம் மாணவியருக்கு ஒருநாள் மாதவிடாய் விடுமுறை

சிக்கிம் மாணவியருக்கு ஒருநாள் மாதவிடாய் விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிம் பல்கலையில் பயிலும் மாணவியர், மாதம் ஒருநாள் மாதவிடாய் விடுமுறை எடுக்க பல்கலை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மாதவிடாய் சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்திக்கும் சிரமங்களில் இருந்து விடுபடும் வகையில் மாதவிடாய் விடுமுறை, நம் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. பீஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படு கிறது. கேரளாவில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே அந்த மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சிக்கிம் பல்கலையில் பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என அந்த பல்கலை மாணவர் சங்கம், பதிவாளரிடம் கோரிக்கை விடுத்தது. இதை பல்கலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அங்கு பயிலும் மாணவியருக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, பல்கலை பதிவாளர் லஷ்மண் சர்மா நேற்று வெளியிட்டார். அதில், 'பல்கலை தேர்வு நடக்கும் நாட்கள் தவிர பிற நாட்களில், சிக்கிம் பல்கலையில் பயிலும் மாணவியர் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுக்க பல்கலை துணைவேந்தர் ஒப்புதல் அளித்துள்ளார்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை