உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு! ஜன.8ல் கூடுகிறது பார்லி. கூட்டுக்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லி. கூட்டுக்குழு ஜன. 8ம் தேதி கூடுகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிச.17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந் நிலையில், மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு ஜன.8ல் கூடி இதுபற்றி விவாதிக்கிறது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர். பார்லி. கூட்டுக்குழு கூடி விவாதித்து, இந்த விவகாரத்தில் சில பரிந்துரைகளை வழங்கும். 90 நாட்களில் இந்த நிகழ்வுகள் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jay
டிச 24, 2024 19:02

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டுக்கு நன்று என்றால் கூட தேசிய கட்சிகளுக்கு இது பெரிய பாதிப்பை கொடுக்கும். தற்போது 15 மாநிலங்களுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் பாஜக, எதிர்க்கட்சிகள், குஷநரிகள் மற்றும் சோரஸ்கள் நாடகத்தை நன்றாக அரங்கேற்றினால் அவர்கள் பூஜ்ஜியத்திற்கு வரவேண்டியது இருக்கும். மாநிலக் கட்சிகளுக்கு இது பெரிய ஜாக்பாட். ஜிஞ்சுக்கு நீதியில் கட்டுமரம் அவர்களே நாடு முழுவதும் ஒரே தேர்தல் இருக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார். திமகவுக்கு நல்லது கிடைக்காத ஒன்றை கட்டுமரம் அவர்கள் கண்டிப்பாக எழுத மாட்டார். ஆகவே ஊபீஸ்களும் ஐடியாலஜி அடிமைகளும் இந்த கோர்ஸில் சேர வேண்டியதில்லை.


Rpalni
டிச 24, 2024 11:18

அலிபாபாவின் நிலை என்ன?


Kasimani Baskaran
டிச 24, 2024 09:49

கூட்டுப்புழுக்கள் இந்திய சரித்திரத்தில் சாதித்தது ஒன்றும் இல்லை. 2ஜி வழக்கில் கூட ஒன்றும் செய்ததாக நினைவில் இல்லை.


vadivelu
டிச 24, 2024 08:42

இப்படி முன்பாகவே சொல்லி விட்டால்தான் ஐயா சோரஸ் ஏதாவது ஒரு புஸ்வானம் கிளப்ப முடியும். அதை வைத்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் கூச்சல் போட்டு ஏற்கனவே பா ஜா க இருக்கு ஆதரவு கொடுக்கும் மக்களிடம் மேலும் வெறுப்பை சம்பாரித்து கொள்ள முடியும்


Karthik
டிச 24, 2024 08:34

எல்லா மசோதாவையும் எதிர்ப்பது தான் எதிர் கட்சியின் வேலையென்று சபையை நடத்த விடாமல் முடக்கிக் கொண்டேயிருக்கும் இதுங்க எல்லாத்தையும் சபைக்கு வெளியே தூக்கியெறிந்து விட்டு சபையில் மசோதாவை நிறைவேற்றுங்கள். மக்களுக்கு இது தேவை. ஒரு மசோதாவுக்கு கூட ஆரோக்கியமான / எதிர்கட்சி என்ற முறையில் அதன் சாதக பாதகம் குறித்து விவாதிக்க துப்பில்லாத இந்த அநிநிய கைக்கூலிகள் தேவையேயில்லை. நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை