உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை: மத்திய அரசின் செலவு ரூ.95,344 மட்டுமே!

ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை: மத்திய அரசின் செலவு ரூ.95,344 மட்டுமே!

புதுடில்லி:'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கைக்காக, மத்திய அரசு ரூ.95,344 மட்டுமே செலவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை தயார் செய்வதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது, உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு, ரூ.95,344 மட்டுமே செலவிட்டதாக தெரிவித்துள்ளது. 194 நாட்களில் இறுதி செய்யப்பட்ட இந்த அறிக்கை, ஒரே நேரத்தில் தேர்தல்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.இது குறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த அறிக்கை மதிப்பிட்டது. இந்த அறிக்கையில் பணியாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு செப்டம்பர் 2, 2023 அன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது முடிவுகளை 194 நாட்களில் தயார் செய்து, மார்ச் 14, 2024 அன்று சமர்ப்பித்தது.இந்தக் குழு தினமும் வேலை செய்ததாகக் கருதினால், ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.491 செலவாகும். வேலை செய்யாத நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், ஒரு நாளுக்கான செலவு அதிகமாக இருக்கலாம்.தகவல், கணினி மற்றும் தொலைத்தொடர்புஅலுவலக செலவுகள்,இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் உபகரணங்கள், பயணச் செலவுகள்,அச்சிடுதல் மற்றும் வெளியீடுஆகியவற்றிற்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர்கள், பணம் எதுவும் வாங்காமல், கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்தனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arul Narayanan
ஜன 28, 2025 15:25

இங்கே விடியல் அரசு அமைத்த ஏராளமான குழுக்களின் செலவுக் கணக்கை கேட்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 28, 2025 07:41

அரசியல்வாதிகளை, அவர்களின் எண்ணிக்கையை இது பெரிய அளவில் கட்டுப்படுத்தும்.


அப்பாவி
ஜன 27, 2025 22:57

சூப்பர்.. கௌரவ நடிகர்kaள் அரசியல் உயர்மட்டக் குழுவிலும்.


Ramesh Sargam
ஜன 27, 2025 20:59

இது சாத்தியமில்லை... என்று நாளை எதிர்க்கட்சியினர் கூறுவார்கள்.


தத்வமசி
ஜன 27, 2025 20:17

இதுவே வேறு கட்சியாக இருந்தால் பல கோடிகளை அனாயாசமாக சிலவு செய்திருப்பார்கள். இதெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும், புரிய வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 19:59

இந்தியர்களின் கனவுத்திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தலை நிறைவேற்றினால், நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் குறையும். செலவுகள் குறையும். குறிப்பாக ஊழல் குறையும். நாடு வல்லரசாகும். அதே போன்று இடைத்தேர்தல்களையும் நிறுத்த வேண்டும். இதனால் வெட்டி செலவுகள் தான் அதிகம். அரசியல்கட்சி அதிக ஊழல் செய்து தேர்தலுக்கு பணம் செலவழிப்பது குறையும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 19:05

பாராட்டுக்கள் .... நன்றி .........


கல்யாணராமன்
ஜன 27, 2025 17:08

ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி


Amsi Ramesh
ஜன 27, 2025 16:58

இங்கு கூவத்தை சுத்திகரிக்க ஆய்வு செய்யவே 1970 களிலே லட்ச்ச கணக்கா செலவு


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 16:33

பொய் பொய் பொய் - பப்பு, ஸ்டாலின் உளறல் நாளை மீடியாவில் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை