மேலும் செய்திகள்
புத்தாண்டு வரவேற்பு விருந்தில் ஒருவர் கொலை
03-Jan-2025
பவானா: புறநகர் டில்லியில் சொத்துத் தகராறு தொடர்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.ரோகிணி செக்டார் 3ல் உள்ள அரசு மதுபானக் கடையில் தரம்வீர், 54, பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.அவரை வழிமறித்த மர்மநபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த தரம்வீர், ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.கொலை குறித்து அவரது மகன், போலீசில் புகார் அளித்தார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சொத்துத் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
03-Jan-2025