உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத ஊர்வலவத்தில் ஒருவர் பலி

மத ஊர்வலவத்தில் ஒருவர் பலி

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் நகரில், நேற்று முன் தினம் இரவு நடந்த ஹிந்து மத ஊர்வலத்தில் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கல்வீச்சில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அதில் ஒருவர் நள்ளிரவில் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.சித்தோர்கர் ராஷ்மி என்ற இடத்தில் நேற்று முன் தினம் இரவு ஹிந்து மத ஊர்வலம் நடந்தது. அதேபகுதியில் உள்ள மசூதி வழியாக ஊர்வலம் செல்ல சிலர் ஆட்சேபனை தெரிவித்ததனர். இதையடுடுத்து, இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், ஷியாம் லால் சிப்பா என்பவர் நள்ளிரவில் உயிரிழந்தார். அவர், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மாவட்ட கலெக்டர் அலோக் ரஞ்சன் தெரிவித்துள்ளார். ஊர்வலம் வந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தச் சம்பவம் காரணமாக சித்தோர்கரில் நேற்று காலை பதற்றம் நிலவுகிறது. இதனால், எஸ்.பி., சுதீர் ஜோஷி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ