உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓ.என்.ஜி.சி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 2,236 அப்ரென்டிஸ் காலியிடம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 25.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி., ) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ், பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் எக்ஸிக்யூட்டிவ், ஃபயர் சேஃப்டி எக்ஸிக்யூடிவ், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2,236 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், ITI, டிப்ளமோ, B.Sc, BE, B.Tech, BBA போன்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல், அதிகபட்சமாக 24 வயத்திற்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://ongcindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 06, 2024 10:45

இந்தவாய்ப்பை மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தியே ஆகவேண்டும், காரணம் , இந்த பயிற்சி காலங்களில் பணியில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும் தான் என்கிற ஆணவம் சிறிதும் இல்லாமல் ட்ரைனிங்கிக்கு வரும் மாணவ மாணவிகளை தன் பிள்ளைகளான நடத்திவருகிறார்கள், மேலும் சம்பளமும் அதிகமாகக் கொடுக்கிறார்கள், அதைவிட அங்கு பெரும் பயிற்சியை வைத்துக் கொண்டு பயிற்சி காலத்துக்குப் பிறகு எங்குவேண்டுமானாலும் பணியாற்றும் அளவுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது, வேண்டியவர் வேண்டாதவர் அழகு நிறம் எதுவுமே இவர்கள் பார்ப்பதில்லை, யாராக இருந்தாலும் அன்புடன் அரவணைத்து இந்த அயிற்சியைக் கொடுக்கிறார்கள், பயன்படுத்திக் கொள்ளவேண்டியது மாணவமணிகள் கடமை , வந்தே மாதரம்


புதிய வீடியோ