உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த க்விக் காமர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்!

மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த க்விக் காமர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சில்லரை விற்பனை கடைகளின் ஒட்டுமொத்த விற்பனையில் பாதியளவை, 'க்விக் காமர்ஸ்' எனப்படும் துரித ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பிடித்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.சில்லரை வணிகத்தில் நுகர்வோரின் மனநிலை குறித்து, 'டாட்டம் இண்டெல்ஜென்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைகளில் பொருள் வாங்குவதாக 46 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர். மேலும், க்விக் காமர்ஸ் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி, ப்ளிப்கார்ட் மினிட்ஸ் உள்ளிட்ட துரித டெலிவரி ஆன்லைன் நிறுவனங்கள், சில்லரை விலை கடைகளின் மொத்த வர்த்தகத்தில் பாதியை பிடித்திருப்பதும் தெரிய வந்தது.வேகமாக அதிகரித்து வரும் க்விக் காமர்ஸ் வரவேற்பால், அவற்றின் மொத்த விற்பனை மதிப்பு, தற்போதுள்ள 51,000 கோடி ரூபாயில் இருந்து, இன்னும் ஐந்தாண்டுகளில் 3.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட இடைத்தரகர்கள் இல்லாதது, வர்த்தகப் போட்டியால் குறைவான விலையில் பொருட்கள் கிடைப்பது, இருந்த இடத்தில் இருந்தே குறைந்த நேரத்தில் பொருட்களை பெற முடிவது ஆகிய காரணங்களால், க்விக் காமர்ஸ் தளங்களை பயன்படுத்துவோர் வேகமாக அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.சில்லரை விலை கடைகளில் வழக்கமாக செலவழிக்கும் தொகையில், குறைந்தது நான்கில் ஒரு பங்கை, க்விக் காமர்ஸ் தளங்களுக்கு 82 சதவீத நுகர்வோர் மாற்றிக் கொண்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆண்டில் இத்துறை 74 சதவீத வளர்ச்சி காணும் என்றும், 2028ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 48 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.குயிக் காமர்ஸ் தளங்களால் திட்டமிடாத ஷாப்பிங் செலவு அதிகரித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆர்டரிலும் 400 ரூபாய் செலவிடப்படுகிறது. சில்லரை கடைகளை விட குயிக் காமர்ஸ் ஷாப்பிங் சராசரி தொகை அதிகம்.

அரசியல் பிரச்னையாக உருவெடுக்கும்'

க்விக் காமர்ஸ் வர்த்தகத்தின் வெற்றியால், சில்லரை கடைகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதுடன், அது அரசியல் பிரச்னையாகவும் உருவாகும் என, நிதி சேவை துறையில் பிரபலமான உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.உலகின் மற்ற பகுதிகளில் க்விக் காமர்ஸ் வணிகம் சிறப்பாக நடைபெறாத நிலையில், நம் நாட்டில் அது வெற்றி பெற்றிருப்பது, எதிலும் உலகிலேயே தனித்துவமான நாடு இந்தியா என காட்டுவதாகவும் உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 15, 2024 22:19

ஆளாளுக்கு ஆன்லைன் கம்பெனி ஆரம்பிச்சுடுவாங்க. இப்பிடித்தான் ஓலா கம்பெனி இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுபவர்களிடமிருந்து கமிஷன் அடித்து சம்பாதித்தது. இன்னிக்கி ஆட்டோக்காரங்களே வாட்சப் வெச்சு குறைந்த வாடகைக்கு வர்றாங்க. அதே கதி ஆன்லைன் குயிக் காமர்சுக்கும் ஏற்படும்.


Ramanathan Murugappan
நவ 15, 2024 16:33

இங்கு பதிவிட்டுள்ள பலரது கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன் ..என் நண்பர் ஒருவர் மளிகை கடை வைத்திருக்கிறார் ..பெருங்காயம் ..அப்பளம் ..இப்படி பல பொருட்கள் 2 மடங்கு லாபத்தில் விற்கின்றனர் ..கேட்டால் 5 % தான் கிடைக்கும் என்பார்கள் ..உண்மையில் 20% முதல் 100% வரை லாபம் கிடைக்கும் தொழில் ..போட்டி கட்டாயம் தேவை ..


mindum vasantham
நவ 15, 2024 15:02

ஸ்விக்கி போல் உள்ளூர் மளிகை கடாயில் இருந்து டெலிவரி செய்யப்பட்டால் இரண்டு பேருக்கும் லாபம் இல்லை என்றால் விறல் விட்டு எண்ணுபவர் இதில் பயன் பெறுவார்


அசோகன்
நவ 15, 2024 14:28

சமீபதில் நான் சென்ற சில கடைகளில் ஆன்லைன் விலை இங்கே கொடுக்கப்படமாட்டாது என்று போர்டு போட்டிருப்பது ஏன்?? அப்போ அதிக விலைக்கு விற்பதுதானே. வெறும் டாக்ஸியாக கூப்பிடப்போது 2000 ரூபாய் கேட்ட டிரைவர்கள் இப்போ 800 ரூபாய்க்கு uber ரில் வருவது எப்படி...???


saiprakash
நவ 15, 2024 12:11

க்விக் காமர்ஸ் வர்த்தகத்தின் வெற்றியால், சில்லரை கடைகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதுடன், அது அரசியல் பிரச்னையாகவும் உருவாகும் ,நாடே நாசமாகும்


skv srinivasankrishnaveni
நவ 15, 2024 11:55

100% உண்மையே பாவம் பல கடைக்காரர்கள் வாயிலே மன்னுபோடறானுக , ஆனால் இப்போதும் நான் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாடார்கடைலேயேதான் வாங்கறேன் இது சத்தியம் நான் அமேசான் லொட்டுலொசுக்குகளை வெறுக்கிறேன் எவனோ கார்போராட்டக்காரன் பஞ்சம்பிழைக்க சிறுவியாபர்களை ஒளிப்பது மஹாகேவலம்


Barakat Ali
நவ 15, 2024 11:51

மளிகைக் கடையில் கிடைக்கும் பொருட்கள் தரக்குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதே காரணம் ....


சமீபத்திய செய்தி