உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்டோபர் முதல் அமலுக்கு வரும் ஆன்லைன் கேம் விதிமுறைகள்

அக்டோபர் முதல் அமலுக்கு வரும் ஆன்லைன் கேம் விதிமுறைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி ஊஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகள், வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின் மீண்டும் ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் கூறினார். விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதற்கு முன், மீண்டும் ஒருமுறை கலந்தாலோசிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:ஆன்லைன் விளையாட்டுகள் விவகாரத்தில், அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்திய பின், விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவை, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதற்கு முன், தொழில்துறை பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு முறை கலந்தாலோசிக்கப்படும்.மேலும் அவகாசம் தேவைப்பட்டால், அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இதுவே மத்திய அரசின் வழக்கமான அணுகுமுறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.'ஆன்லைன் கேமிங் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) மசோதா 2025'க்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த மாதம் 22ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ManiMurugan Murugan
செப் 20, 2025 00:01

செயலி களையும் வகைப்படுத்தி வேண்டாத செயலிகளை முக்கியமாக பொழுதுபோக்கு செயலிகளை யும் முறைப்படுத்தும் சட்டம் வந்தால் நன்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை