உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்: புதிய தலைவர் அதிரடி

திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்: புதிய தலைவர் அதிரடி

ஹைதராபாத் : ''திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.ஆந்திராவில், 'டிவி5' என்ற 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியை நடத்தி வரும் பி.ஆர்.நாயுடு, வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.பல்வேறு துறைகளை சேர்ந்த 24 பிரமுகர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பி.ஆர்.நாயுடு கூறியதாவது:திருமலை திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.ஏற்கனவே பணியில் இருக்கும் ஹிந்து அல்லாத ஊழியர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்றுவதா அல்லது அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதா என்பது குறித்து ஆந்திர அரசுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.கடந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சியில் திருமலையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. கோவிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். என் கடமையை நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நிறைவேற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sundarsvpr
நவ 02, 2024 08:38

ஹிந்துக்கள் மட்டும் என்பதில் மாற்று கருது இல்லை. இது ஒரு தொடக்கம். ஹிந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களா என்பது முக்கியம். நெற்றியில் மத சின்னம் இருக்கவேண்டும் எல்லா கடைகளிலும் சுவாமிபடம் இருக்கவேண்டும். கடையில் சாமீ படம் இருந்தால் கடையில் பணி செய்பவர்கள் காலணி தவிர்க்கவேண்டும். மனம் இருந்தால் எதையும் சாதிக்க இயலும்.


அப்பாவி
நவ 01, 2024 20:54

அவிங்கவங்க இடங்களில் அவிங்கவங்க மட்டுமே ஆட்டையைப் போடலாம்.


Venkatesan Srinivasan
நவ 01, 2024 18:10

ஏன் ஜாதி மத அடைமொழிகள் விலக்கப்பட வேண்டும்? கண்டிப்பாக பெயருடன் மத ஜாதி குறியீடுகள் அவசியம். தமிழ் நாடு தவிர ஏனைய மாநிலங்களில் ஜாதி பெயர் குறிப்பிடப்படுகிறது. அதில் என்ன ரகசியம் காக்க வேண்டிய தேவை? கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடுகள் பெற மத ஜாதி குறியீடுகள் பயன்படுத்தும் போது இல்லாத ரகசியம். தமிழ் நாட்டில் இந்த குறியீடுகள் தவிர்த்தது காரணமாகவே போலி மத மாறிகள் தங்களுக்கு சம்பந்தமில்லாத பதவி பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


yts
நவ 01, 2024 14:35

super


ramesh
நவ 01, 2024 11:39

சரியான முடிவு .இதே போல தமிழ்நாட்டில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் களுக்கும் இந்துக்கள் அல்லாதவரை அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை இந்துக்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் .கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களையும் பணியில் அமர்த்த கூடாது


vijai hind
நவ 01, 2024 11:16

நாட்டில் உள்ள இந்து கோயில் அனைத்தையும் இந்துக்கள் தான் பணியாற்ற வேண்டும்


theruvasagan
நவ 01, 2024 11:11

தனக்கென எந்த சிந்தாந்தமும் இல்லாவிட்டால் அது மதமில்லை. வியாபாரம்.


aaruthirumalai
நவ 01, 2024 10:18

சரியான முடிவு.


Barakat Ali
நவ 01, 2024 10:06

ஹிந்து கோவிலில் மாற்று மதத்தினருக்கு என்ன வேலை? அவர்களைப் பொறுத்தவரை அங்கே நடப்பது உருவ வழிபாடு ....


R K Raman
நவ 01, 2024 14:43

பணம் கிடைக்கிறது என்றால் எதுவும் செய்யலாம்


angbu ganesh
நவ 01, 2024 09:58

தமிழ் நாட்டில் இந்த சட்டம் அமுல் படுத்தபட வேண்டும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை