உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக பயங்கரவாத பாடம் படிப்பதற்கு கட்டணமாக, 156 ரூபாயை நிர்ணயித்துள்ளது. ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n07ivwcf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நவ., 8 முதல் துவங்கும் இந்த ஆன்லைன் பாட வகுப்பிற்கு கட்டணமாக இந்திய மதிப்பில், 156 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளனர். பெண்களுக்காக ஆரம் பிக்கப்பட்ட ஜமாத் உல் - முமினாத் பயங்கர வாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க இந்த வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில், கடந்த மாதம் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ளும்படி அறி வுறுத்தியிருந்தார். அதனை தொடர்ந்தே ஆன்லைன் மூலம் பயங்கரவாத பாடம் எடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

வாய்மையே வெல்லும்
அக் 23, 2025 15:59

வெள்ளிக்கிழமை விரதம் .. இது பாரம்பரிய இந்திய பெண்களுக்கு .. தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.. வெள்ளிக்கிழமை - குண்டுபோடுவது எப்படி .. இது பச்சை வூரில் வீட்டில் சும்மா இருக்கிற தாய்மார்களின் சேட்டை வேலை .. இம்ரான் வூரு விளங்கிடும்.. இப்படியே விட்டால் இந்தியா நாட்டை பதம்பார்ப்பார்கள் பச்சை நாட்டு அலங்கோல தேங்காய் பசங்க


lana
அக் 23, 2025 15:30

அதெல்லாம் சரி தான். முதலில் பெண்கள் படிக்க விடுங்க. அதற்கு பிறகு இந்த வேலை எல்லாம் செய்யலாம்


பாரத புதல்வன்
அக் 23, 2025 13:40

நம்ம பப்புகான் ஐ சேர்த்து உடுங்க....


RAMESH KUMAR R V
அக் 23, 2025 12:43

தீவிரவாதிகளின் பல்கலைக்கழகம் பாகிஸ்தான். கடுமையான நடவடிக்கை தேவை.


VENKATASUBRAMANIAN
அக் 23, 2025 09:41

மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. நிதானம் பேராபத்து


duruvasar
அக் 23, 2025 09:18

இங்கேயிருக்கிற துடிப்பானவர்களுக்கு அறிய வாய்ப்பு.


Kalyanaraman
அக் 23, 2025 08:31

தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் பலகாலமாக இருந்து வருகிறது. பாக்-கிற்கு அமெரிக்கா பல வகைகளில் வெளிபப்டையாக உதவி செய்து வருகிறது. நாம் குறைந்தபட்சம் இந்தியாவில் தயாராகும் அமெரிக்க நிறுவன பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


visu
அக் 23, 2025 09:00

நாம் அமெரிக்காவிடம் இருந்து ஐ போன் தவிர என்ன வாங்குகிறோம்


S.L.Narasimman
அக் 23, 2025 07:42

இவெங்கெல்லாம் படித்து முன்னேறனும் என்ற ஆசை இல்லை. மதம் மதம்ன்னு சண்டையிட்டு அழிகிறார்கள்.


Ramesh Sargam
அக் 23, 2025 06:51

அந்த பயிற்சி மையத்தை ஆன்லைன் மூலம் அழிக்கும் வகையை இந்தியா கண்டுபிடிக்கவேண்டும். மக்களுக்கு இலவசமாக அழிக்கும் வழிமுறைகளை சொல்லித்தரவேண்டும்.


சுந்தர்
அக் 23, 2025 06:08

ஆபரேஷன் சிந்தூர் 2.0 போட்டு இதை முடிக்க வேண்டும்...