உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விரு அமைப்புகளும் ஒவ்வொரு மாதமும் கூடி காவிரி நீர் பங்கீடும் போது எழும் சிக்கல்களை ஆலோசிக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lw94rcih&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் இன்று (ஆக.11) கூடியது. கூட்டத்தில் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஆகஸ்ட் மாதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 45.5 டிஎம்சி நீரையும், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் காவிரி நீரையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதையடுத்து, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா 1 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் முடிந்த பின்னர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது.பின்னர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் தர காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை பிறப்பித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி வீதம், மொத்தம் 15 நாட்களுக்கு 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஆக 12, 2026 00:52

கையாலாகாத மத்திய பாஜக அரசு பல் குத்திக்கொண்டு வழக்கம் போல் வேடிக்கை பார்க்கும்!


D Natarajan
ஆக 11, 2026 21:37

கொடுக்க மாட்டார்கள் . என்ன செய்வார்களாம் . பூஜ்யம் தான். வருண பகவான் கண் திறக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 11, 2026 18:32

அங்கிருக்கும் நீ அங்குள்ள ர் ஒரு சில மாவட்டங்களின் ஒரு போக சாகுபடி க்கு மட்டுமே போதுமானது. நமக்கும் சாகுபடிக்கு போதாது . இரு மாநிலங்களுக்கும் உதவாத தீர்ப்பு. நமக்குத் தேவையான குடிநீருக்கு மட்டும் திறந்து விடவும்.


Sivagiri
ஆக 11, 2026 17:55

இதெல்லாம் டூ லேட். . . , இப்போ வந்து, உத்தரவினால் ஒரு யூஸ் - ம் கிடையாது,, போன மாசம் வர வேண்டிய உத்தரவு , பல மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளில் உள்ள அணைகளை அனைத்தையும் மத்திய அரசின் கட்டிப்பாட்டில் கொண்டுசெல்ல வேண்டும். .


Rathnam Mm
ஆக 11, 2026 19:07

well said


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 11, 2026 17:34

ஏற்கனவே 3500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவு வெள்ளத்துல போயிடுச்சா போகலையா?


Sun
ஆக 11, 2026 16:25

வழக்கம் போல எந்த உத்தரவையும் கர்நாடகா அரசு நிறைவேற்றப் போவதில்லை.த.வெ.க அரசும் எந்த அழுத்தமும் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு தரப் போவதும் இல்லை. வேறு ஏதாவது புதுப் பிரச்சனையை இங்கு கிளப்பி பிரச்சனையை மடை மாற்றம் செய்யும் வேலையில்தான் இந்த அரசு இங்கு ஈடுபடும்.


Diraviam s
ஆக 11, 2026 16:19

No sanctity for these orders..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை