உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பகிரங்கம்! 1974, 1976 அரசுகளே மீனவர் பிரச்னைக்கு காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் புட்டு வைத்தார்

பகிரங்கம்! 1974, 1976 அரசுகளே மீனவர் பிரச்னைக்கு காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் புட்டு வைத்தார்

'தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதற்கு, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், அப்போதைய மத்திய அரசு எடுத்த முடிவுகள் தான் மூலக்காரணமாக அமைந்து விட்டன. இருப்பினும், மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளும்படி இலங்கை அரசிடம் பேசி வருகிறோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:மத்திய அரசு அளித்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருப்பவர்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றைச் சேர்ந்த மீனவர்கள்தான் அதிகம் என்பது தெரிய வருகிறது.மொத்தம் 97 பேர்வறிய நிலையில் உள்ள மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, அவர்களுக்கு கடல் எல்லை எதுவென்று சரியாக கணிக்க முடியாமல் சில நேரங்களில் எல்லை தாண்டி சென்று விடுகின்றனர். அவ்வாறு செல்லும் மீனவர்களை கைது செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் தாக்கப்படுகின்றனர். சில நேரங்களில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.எனவே, இந்த நிலையை மாற்றி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களில் அதிகம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என சிவா குறிப்பிடுகிறார். நேற்று முன்தின நிலவரப்படி இலங்கை சிறைகளில் 86 தமிழக மீனவர்கள் இருக்கின்றனர். நேற்று மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, 11 மீனவர்கள் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம், 97 பேர் இலங்கை சிறையில் உள்ளனர்.இவர்களில் 83 பேர் தண்டனை குற்றவாளிகள். மூன்று பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. தவிர, 11 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இரண்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.ஒன்று 1996ல் கொண்டு வரப்பட்ட மீன் மற்றும் கடல்வாழ் வளங்கள் சட்டம்.மற்றொன்று, 1979ல் கொண்டு வரப்பட்ட அன்னிய மீன்பிடி படகுகள் குறித்த மீன்வள ஒழுங்குமுறை சட்டம்.கடும் தண்டனைஇவை இரண்டுமே 2018, 2023ல் திருத்தம் செய்யப்பட்டன.அதன்படி, எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் மற்றும் நீண்டநாள் சிறை ஆகியவற்றை அளிக்க முடியும். அதிலும், தற்போது சிறைகளில் உள்ளவர்களில் பலரும் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் குற்றம் செய்கிறவர்கள். இதனால்தான், இந்த விவகாரம் தீர்வை நோக்கிச் செல்ல முடியாமல், மேலும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.இரண்டு முடிவுகள்இந்த பிரச்னை முதலில் உருவானது, 1974ல். அப்போதைய மத்திய அரசு, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை, மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து வரையறுத்தது.இன்னொன்று 1976ல், யார் எந்த பகுதியில் மீன்பிடித்துக் கொள்வது என்பது தொடர்பாக, இந்தியா - இலங்கை இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள்.முந்தைய மத்திய அரசுகளின் இந்த இரண்டு முடிவுகள் தான், தற்போதைய மீனவர் பிரச்னைக்கு மூல காரணம். இருப்பினும், தற்போது மீனவர்கள் பிரச்னையில், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி தொடர்ச்சியாக துாதரக அளவில் இலங்கை அரசிடம் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.கடந்த 1974, 1976 ஆண்டுகளில் மத்தியில் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

எங்கள் சம்பளத்தை நிறுத்துங்கள்

தமிழக எம்.பி., திடீர் கோரிக்கைலோக்சபாவில், ஜோதிமணி, கரூர் எம்.பி., பேசுகையில், ''திருச்சி - கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை, நீண்டகாலமாக இருவழிப் பாதையாக உள்ளது. அதை நான்குவழிப் பாதையாக மாற்ற வேண்டும். தமிழகத்தின் முக்கிமான மையப்பகுதியில் இந்த சாலை உள்ளது. கரூர், திருப்பூர், கோவை போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில் நகரங்கள் பயன்படுத்தும் சாலையாகவும் இது இருந்து வருகிறது. கோவை - கரூர் இடையில், நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு நன்றி. அதேபோல திருச்சி - கரூர் சாலை காவிரி ஆற்றை ஒட்டி வருவதால், மாற்றுப்பாதையாக கிரீன்பீல்டு அலைன்மென்ட் தேவை. அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், திடீரென அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, இது தொடங்கப்பட்டு, திருச்சி - கரூர் - கோவை இடையே நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை பேசுகையில்,'' கடந்த வாரம், எம்.பி.,க்களுக்கு, சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கடந்த 4 மாதங்கள் 4,000 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி தர வேண்டும். எம்.பி.,க்களுக்கான சம்பளத்தைக்கூட நிறுத்திவிட்டு, தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரித்து வழங்க வேண்டும். எம்.பி.,க்கள் சம்பளத்தைவிட, நாட்டு நலனே முக்கியம். எனவே நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும்'' என்றார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saleemabdulsathar
மார் 29, 2025 13:57

கையாளாகத வெளியறவுத்துறை மற்றவர்கள் மீது பழி போடுகிறது


MANIMARAN R
மார் 28, 2025 16:39

நம்ம நாட்டு படை தடுக்கவேண்டியதுதானே நம்ம மீனவர்களை


panneer selvam
மார் 28, 2025 17:13

TN government does not accept intervention of Coast Guards while Indian fishermen trespass into Srilankan water . It is the ground reality


S.Martin Manoj
மார் 28, 2025 11:21

கடந்த பதினொரு வருட ஆராய்ச்சியில் இது ஒரு அரியவகை கண்டுபிடிப்பு


KavikumarRam
மார் 28, 2025 14:46

குத்தம் செஞ்சவன விட்டுட்டு தீர்வு சொல்றவனை குத்தம் சொல்றதே இந்த முரசொலி கும்பலுக்கு பொழப்பா போச்சு


தமிழன்
மார் 28, 2025 11:01

11 வருசமாச்சு இன்னும் காரணத்தை தேடிக்கொண்டே இருக்கிறது இந்த கையாலாகாத குப்பை அரசு அவனுக செய்த தப்புக்குத்தானே இவனுகளை ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறார்கள் மக்கள் 11 வருடமாக காரணத்தை தேடி கொண்டிருந்து தூங்கினால் நீயும் ஆட்சியை விட்டு கீழிறங்கு


N Srinivasan
மார் 28, 2025 10:08

மீனவர்கள் கடலில் இலங்கைப்படையினரால் கைது என்பது தினம்தோறும் வரும் செய்தி ஆகி விட்டது. மாநில அரசு மத்திய அரசுக்கு தபால் போடுவது என்பது ஒரு நாடகம். மத்திய அரசு இலங்கை அரசிடம் என்ன பேசுகிறது என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. இலங்கை அரசின் கடல் படைப்போல் நமது நாட்டின் கடல்படை, கடல் ரோந்துப்படை என்ன செய்கிறது இந்த விஷயத்தில்? எல்லையை தாண்டும் பொழுது எச்சரிக்கை விட மாட்டார்களா எடுத்த உடனே கைதுதானா? சமீபத்தில் அண்ணாமலை சில மீனவர்களுடன் டெல்லியில் பேசியது என்ன? சில மீனவர் சமுதாயம் இலங்கை சென்று பேசியது அது என்ன? தொழில் நுட்பம் மூலமாக இதை கட்டுப்பதுத்த முடியாதா? மொத்தத்தில் மத்திய அரசு தன்னுடைய தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு விடுமோ என்ற பயம் உள்ளது? எப்போதும் சரியாக பேசும் ஜெய்ஷ்ங்கர் கூட இந்த விஷயத்தில் கடந்த காலங்களை கூறி சமாளிக்கிறார் என தோன்றுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை