உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சூசகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:கூட்டத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அனைத்து தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அனைத்து கட்சி தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினரை பாராட்டினர். இந்திய ராணுவத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நாங்கள் மத்திய அரசிற்கும், ராணுவத்தினருக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றனர். அதிகாரத்திற்காக மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
மே 08, 2025 15:26

ஹரோப் வகை ட்ரோன்களை சொல்றீங்களா ????


A.Gomathinayagam
மே 08, 2025 13:53

தீவிரவாதிகளை முற்றிலும் வேரோடு அழிக்கும் வரை ஆப்ரஷன் சிந்தூர் தொடர வேண்டும்


Raja k
மே 08, 2025 13:53

நாங்கள் எதிர்பார்ப்பது இதுவல்ல, பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மீ்ட்கப்பட வேண்டும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை