உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

புதுடில்லி: 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் அமித்ஷா பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதி முகாம்களை மட்டுமே அழித்தோம். பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்து தாக்கவில்லை.உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல நாடுகள் பதில் அளித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த பதில் அவற்றில் மாறுபட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5czddmty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 தகுந்த பதிலடி பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படையினர் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகமே பாராட்டுகிறது. நான் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நமது நாடு பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. பஹல்காமில், பயங்கரவாதிகள் நம் மக்களை கொடூரமாக கொன்றனர். பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். அந்த பதில் இன்று தெளிவாகத் தெரிகிறது. முழு உலகமும் இப்போது நமது ஆயுதப் படைகளையும், அவர்களின் தாக்குதல் திறன்களையும் பாராட்டுகிறது.

துல்லியமாக தாக்குதல்

பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raja k
மே 23, 2025 20:07

பகல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் எங்கே, எப்படி நாட்டை விட்டு வெளியே போனார்கள்?


J.Isaac
மே 23, 2025 21:06

கொலைக்காரர்களை பிடிப்பதில் கோட்டைவிட்டு விட்டு ....


சிவம்
மே 23, 2025 19:15

ஐயா, உலகநாடுகள் பாராட்டுவது நல்ல விஷயம் தான். ஆனால் உள் நாட்டில் பல தேச விரோதிகளை விட்டு வைத்திருக்கிறீர்கள். அவர்கள் இருக்கும் வரை யார் பாராட்டினாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. 10 வருடம் ஆட்சியில் இருந்தும் கூட தேச விரோத மீடியாகளை உங்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த மீடியாக்கள் மூலம் மக்கள் பொய்யை நம்புகிறார்கள். அதன் பலனை தேர்தலில் காட்டுகிறார்கள். அரசு செய்திகளை கட்டாயம் இரு முறை ஒளிபரப்ப வேண்டும் என்று சட்டம் வரும் வரை பிஜேபியின் வளர்ச்சி மக்களிடையே இப்போது போல் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை