உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 நாட்கள் நடைபெறும் ஆபரேஷன் சிந்தூர் சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்

10 நாட்கள் நடைபெறும் ஆபரேஷன் சிந்தூர் சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்

புதுடில்லி: ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் வகையில் மே 13 முதல் மே 23 வரை தேசிய திரங்கா யாத்திரைக்கு பா,ஜ., ஏற்பாடு செய்துள்ளது.ஆபரேஷன் சிந்துார் வெற்றி தொடர்பாக இன்று டில்லியில்,பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்துார் சாதனைகளை பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கும், நாடு முழுவதும் பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்ப்பதற்குமான உத்திகள் விவாதிக்கப்பட்டன. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மே 13 முதல் மே 23 வரை 10 நாட்கள் திரங்கா யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:நாடு முழுவதும் 10 நாட்கள் திரங்கா யாத்திரை நடத்தப்படும். இந்த நிகழ்வுகளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும், நாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இந்த பிரசாரம் இருக்கும்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mecca Shivan
மே 13, 2025 10:16

போர்வீரர்களுக்கான வெற்றி இது..


babu
மே 13, 2025 07:52

ஓட்டு ......


எம். ஆர்
மே 12, 2025 23:08

எடப்பாடி ஜி யோட பிறந்த நாளை கொண்டாட இந்தியா பன்றிஸ்தான் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்ததாக அமித்ஷா திரவிட முன்னேற்றக் கழக அடிமை விஞ்ஞானி ஒருத்தன் இன்று மேடையில் கூவினான் இதையும் கூட்டுக் களவாணிகள், சாரி கூட்டாளிகள் சேர்ந்து கொண்டாடினால் ஓட்டு பிச்சை நன்றாக கலெக்ஷனை அள்ளும்


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 12, 2025 20:30

1963 சுதந்திர தின வெளியீடாக குங்குமம் எனும் பீறிட்ட சினிமாவில் குங்குமம் பற்றிய கண்ணதாசன் பாடல். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் திங்கள் முகத்தில் செம்பவளம் எனத் திகழும் மங்கள குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம் குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம் ஆஅஆஅஆஆஆஆஅ காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம் கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம் கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம் குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் நற்குல மாந்தர் கற்பினை போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் நற்குல மாந்தர் கற்பினை போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம். மங்கள குங்குமத்தை நாம் போற்றி புகழ்ந்து இன்று அறுபது ஆண்டுகள் கடந்து விட்டோம்.


ஈசன்
மே 12, 2025 20:03

கண்டிப்பாக செய்ய வேண்டும். மத்திய பிஜேபி இந்த பொறுப்பை அண்ணாமலையிடம் ஒப்படைப்பது நல்லது. அவர்தான் தமிழகம் முழுவதும் நடை பயணம் சென்று பல கிராம மக்களை சந்தித்துள்ளார். நட்டா செய்வாரா?


Jocker Political
மே 12, 2025 20:00

USA Warning... They stop this war... now what the ridiculously.. for this drama... All for election campaign .. they plan for World cup final.. but its went wrong way.. really shame on them.. People is the one suffer lot...


sankaranarayanan
மே 12, 2025 19:44

10 நாட்கள் நடைபெறும் ஆபரேஷன் சிந்தூர் சாதனை திரங்கா யாத்திரை அய்யய்யோ என்ன செய்வது என்று தெரியாமல் திராவிட மாடல் அரசு திகைக்கிறது போர் நிறுத்தம் மாலை 5-மணி முதல் என்றும் மாலை 3-30மணிக்கே இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஆயத்தம் ஆனா நிலையில் இங்கே இந்த திராவிட மாடல் அரசு எதோ சம்பந்தமே இல்லாமல் ஒரு நடை பயணம் மேற்கொண்டு மக்களை திசை திருப்பவே செய்த சதித்திட்டமேதான் இப்படித்தான் போர் நிறுத்தம் என்று அறிவித்தவுடன் கலைஞர் பீச் கரையில் உண்ணாவிரதம் இருந்து அதை முடித்தார் என்று கதை உள்ளது ஆனால் உடனே லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டனர் அது போன்றுதான் இதுவும் உள்ளது எல்லாமே வேறு ம் தேர்தலுக்கு விளம்பரங்கள் அவ்வளவேதான்


Barakat Ali
மே 12, 2025 19:31

இதைக் கவனிச்சாலும் டீம்கா காங்கிரஸ் வாய வெச்சுக்கிட்டு சும்மா இருந்துர்றது நல்லது .... ஆனா அவங்களால இருக்க முடியாது .... இவங்களும் இவங்க அடிமைகளும் பேசப்பேச பிஜேபிக்கு வரும் காலங்களில் ஓட்டு கூடும் .... இங்கே தளத்தில் நான் பார்த்த ஒரு பதிவு [ஜி க்கு / பாஜகவுக்கு இனி வரும் தேர்தல்களில் வாக்கு வங்கி கூடிருமோ ? பதற்றத்தில் , டீம்கா , காங்கிரஸ் மற்றும் அவர்களின் அடிமைகள் ] ...


m.arunachalam
மே 12, 2025 19:29

வெளிநாட்டிலிருந்து வந்த தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி விட்டோம் . உள்நாட்டு தீவிரவாதத்தை போதைப்பொருள், கள்ளச்சாராயம் , பாலியில் வன்கொடுமைகள் மற்றும் ஜாதி மத மோதல்கள் பலவிதத்திலும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம் . என்ன செய்ய போகிறோம் ?. தெளிதல் நலம் .


m.arunachalam
மே 12, 2025 19:17

தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு நல்ல பதிலடி கொடுத்துவிட்டோம் . நம் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் செயலை பாராட்டுவோம் . இங்கும் உள்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் , பாலியல் கொடூரங்கள் கயிறுகட்டும் கலாச்சாரம் , சினிமா, கிரிக்கெட் மற்றும் ஜாதி மத மேன்மையை நிரூபிக்கவும் தாதாக்களின் ஆளுமையும் லட்சக்கணக்கான / கோடிக்கணக்கான மக்களை அளித்துக்கொண்டிருக்கின்றது . அதை சரி செய்யவும் தீவிரமான நடவடிக்கை தேவை . தெளிதல் நலம் .


புதிய வீடியோ