உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐந்து சர்வதேச மொழிகள் கற்க இளைஞர்களுக்கு வாய்ப்பு: தர்மேந்திர பிரதான்

ஐந்து சர்வதேச மொழிகள் கற்க இளைஞர்களுக்கு வாய்ப்பு: தர்மேந்திர பிரதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: '' சர்வதேச அளவில் ஐந்து மொழிகளை படிக்க, ராஜஸ்தானில் புதிய தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.ஜெய்ப்பூரில் இன்று ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு நடந்தது. இதில் தேசிய கல்விக் கொள்கையில் மொழியின் முக்கிய பங்கு குறித்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது: ராஜஸ்தானில் ஒரு மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட மொழி ஆய்வகத்தை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் சர்வதேச அளவில் ஐந்து மொழிகளை கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், என்ஐடி ஜெய்ப்பூர் மற்றும் ஐஐடி ஜோத்பூர் போன்ற நிறுவனங்கள் மூலம் உறுதிசெய்து, விரும்பும் மொழிகளைத் தேர்ந்தெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாறத் தயாராக உள்ளது. அதன் தொழில் முனைவோர் பாரம்பரியத்தின் மூலம் வேலைவாய்ப்பாளர்களை வளர்ப்பதன் மூலம் தேசிய வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
டிச 12, 2024 16:17

சர்வதேச மொழிகள் என்று பெயரில் வழக்கம் போல் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிப்பது தானே?


அப்பாவி
டிச 12, 2024 08:04

உள்ளூர் மொழிகளை தூக்கி மிதிச்சு இந்தியைத் திணிப்பார்கள். உலக மொழிகளை கற்க வாய்ப்பாம்.


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 09:08

ஆமா எப்போதும் இதே புராணம், அரபி மொழி கற்பிக்கும் மதரசாக்கள் ஊக்குவிப்போம் அவர்கள் மாத்திரம் பேசி பழக இந்தியை விட்டுவிடுவோம்


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 06:24

எந்தெந்நத மொழிகள் ?


T.sthivinayagam
டிச 11, 2024 22:20

சமஸ்கிருதத்தை தமிழில் எழுதி பயிற்சி பெறும் நிலை தான் உள்ளது


முக்கிய வீடியோ