உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை; இரு அவைகளும் ஒத்திவைப்பு

பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை; இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அவை தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவையை தொடர்ந்து முடங்கி வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவாதம் மட்டும் சரியாக நடந்தது. மற்ற நேரம் எல்லாம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை செயல்படாமல் முடங்கி வருகிறது.அந்த வகையில் இன்று காலை (ஆகஸ்ட் 18) 11 மணிக்கு லோக்சபா கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ''போராட்டம் நடத்தும் எம்பிக்கள் அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். தொடர்ந்து அமளியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என எச்சரித்தார்.அதுமட்டுமின்றி, அவர், ''சட்டசபையில் அரசு சொத்துக்களை உறுப்பினர்கள் சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் அவ்வாறு முயற்சித்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்'', என்றார். பின்னர் பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. வாழ்க்கை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மசோதாவை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் லோக்சபாவில் விளக்கம் அளித்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல், ராஜ்யசபா கூடியதும் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து ராஜ்யசபா தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sun
ஆக 18, 2025 18:06

எதிர் கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர்.சபையை ஒத்தி வைக்கும் வேலையை மட்டும்தான் சபாநாயகர் ஓம் பிர்லா எப்போதும் பண்ணிக் கொண்டிருக்கிறார். மிக மிக மென்மையாக நடந்து கொள்கிறார். ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு புதுப் புது பிரச்சனைகளை வேண்டும் என்றே கையில் எடுத்து தொடர் பிரச்சனை செய்கின்றன. இன்றைய நிலையில் பி.ஹெச். பாண்டியன் போன்ற சபாநாயகர்தான் பாராளுமன்றத்துக்கு தேவை


Sridhar
ஆக 18, 2025 15:02

இந்த ஆளு ஏன் சபய திருப்பி திருப்பி ஒத்திவைக்கிறாரு? பேசமா குண்டுகட்டா ரகளை செய்யும் அத்தனை அயோக்கிய சிகாமணிகளையும் வெளியே தள்ளி கதவை சாத்த வேண்டியதுதானே? ஒழுங்கா பாராளுமன்ற நடவடிக்கையில கலந்துக்கணும்னா இருங்க இல்லேன்னா இங்கிருந்து ஓடிடுங்கனு வெரட்டி அடிக்கறத விட்டுட்டு.... இத்தனைக்கும் அவங்க வந்து ரகளையில் ஈடுபடப்போறாங்கன்னு நல்லாவே எல்லாருக்கும் தெரியும். அதுக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடுதலே இல்லயா? மக்கள் பணம் விரயமாவது ஒருபக்கம். ரொம்ப பெரிய மாண்பு படைத்த பாராளுமன்றம்னெல்லாம் சொல்றோம், அது கேலிக்கூத்தாக்கிட்டுருக்கே, அது மிகப்பெரிய அவமானம் இல்லையா?


Balasubramanian
ஆக 18, 2025 14:03

எதிர் பாராத விதமாக எதிர் கட்சிகள் பீகாரில் வெற்றி பெற்று விட்டால்? இந்த அமளி ஒத்தி வைப்பு க்கு ஆன செலவை எதிர் கட்சிகள் ஏற்குமா? (ஒரு நாள் சுமார் எட்டு மணி நேரம் பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு சுமார் ரூ 12 கோடி ரூபாய்)


Anand
ஆக 18, 2025 13:34

"தற்குறியின் பின்னால் தருதலைகள்"


kumaran
ஆக 18, 2025 13:34

இரு சபைகளுக்கு ஒழுங்காக நடக்க கூடாது இதுதான் எதிர் கட்சி தலைவர் ராகுலின் திட்டம். மேலும் இந்தியாவை பிடிக்காதவர்கள் தான் இவர் கூட்டாளிகள் உதாரணமாக ஜார்ஜ் சோரஜ், பாகிஸ்தான் ஆதரவு அமெரிக்க தொழிலதிபர்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது ஆக இவர் இந்திய தேசத்திற்கான தலைவரா என்பது சந்தேகம் வலுக்கிறது ஏன் இவ்வாறு செய்கிறார்


Shivakumar
ஆக 18, 2025 13:23

எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற தனத்தால் மக்களின் வரிப்பணம் வீணாக போகின்றது. இவர்களால் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. மக்கள் உணர்ந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.


M Ramachandran
ஆக 18, 2025 13:02

நாட்டின் எதிர் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் சுய நலவாதிகளின் சுய ரூபாம் தெரிகிறது. நம் நாட்டின் மக்களுக்கு எதிரி யான கட்சிகள்.


சமீபத்திய செய்தி