உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் கடும் அமளி: முடங்கியது பார்லிமென்ட்!

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: முடங்கியது பார்லிமென்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் தொகுதி சீரமைப்பு குறித்து விவாதிக்க கோரி தமிழக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் தி.மு.க., எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை.இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்சபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை ஒத்திவைத்து ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார். இதனால் பார்லிமென்ட் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கின. நாளை காலை 11 மணி வரை பார்லிமென்ட ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mediagoons
மார் 20, 2025 21:26

இந்து மதவாத, இந்தி இனவாத அரசின் அனைத்து முடிவுகளும் பாராளுமன்றத்துக்கு அப்பால் ஆர் எஸ் எஸ் அலுவலகத்திலும், அம்பானி அதானி வீடுகளிலும் , அந்நிய நாடுகளிலும் எடுக்கப்படுகின்றன.


sankaranarayanan
மார் 20, 2025 18:29

என்றைக்கு அய்யா நமது பார்லிமெண்டு ஒழுங்காக நடந்திருக்கிறது ஒரு நாள்கூட ஒழுங்காக நடக்க எதிர் கட்சிகள் விடவில்லை. அதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை மக்கள் பணம் மண்ணில் போவுது மாநிலங்களில் மக்களோ மதுபானத்தில் திகழ்கிறார்கள் நாடு முன்னேற வேண்டும் என்ற ஆசை அரசியல் கட்சிகளுக்கு எப்போதுதான் வரும்


Sudha
மார் 20, 2025 17:40

இந்த்த வெளிநடப்பு அமளி டிராமா முடியாத வரை எம் பி எண்ணிக்கையும் மாற்றக்கூடாது. சுப்ரீம் கோர்ட் இதற்கு முடிவு கட்ட வேண்டும். அல்லது ஒரு மக்கள் இயக்கம் . கேள்வி எழுப்பினால் அதற்கு டோக்கன் கொடுத்து நேரம் ஒதுக்க வேண்டும். அதுவரை பொத்திகிட்டு இருக்க வேண்டும். தவறு இருபக்கமும் இருக்கிறது.


Kanns
மார் 20, 2025 16:11

Supreme LokSabha Must Not be Adjourned or Disrupted. Instead MPs eVoting Must be Done for Working if Majority Wants. If Not Cost Must be Recovered from MPs UnWilling to Work/Disrupting. Further If MPs Must be WrittenWarned if Disrupting OfficialWorks & Suspended If Disrupting more than Thrice pm With Cut of All Pay-Perks. However MPs Request for Raising Peoples Issues Must be Recorded in House Proceedongs Even if Not Allowed


எவர்கிங்
மார் 20, 2025 16:05

எதிர் கட்சிகள் என்று சொல்வதை விட தேச துரோகிகள் என்பது சரியான வார்த்தை


Dharmavaan
மார் 20, 2025 15:26

திமுக ரவுடி பொறுக்கிகள் எம்பி ஆகிவிட்டார்கள் அவர்களை வெளியேற்றி தலைவர் அவையை நடத்த வேண்டும்


R.P.Anand
மார் 20, 2025 15:22

அய்யா ஒத்தி வச்சுட்டு காரணமாக இருக்க வங்க சம்பளத்த கட் பண்ணுங்க ஆபீசர்


RAVINDRAN.G
மார் 20, 2025 14:50

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் சபையை முடக்குகிறார்கள்.தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளை கேள்வியே கேட்க விடாமல் செய்கிறார்கள். சட்டமன்றத்துக்கு நாடாளுமன்றம் எவ்வளவோ பரவாயில்லை


தத்வமசி
மார் 20, 2025 14:27

தேவையில்லாமல் சபையின் நேரத்தை வீணடிக்கிறார்கள். இவர்களை வெளியேற்றுங்கள்.


K Veerappan
மார் 20, 2025 14:15

கூச்சல் போடும் உறுப்பினர்களை சபாநாயகர் அப்புறப்படுத்த வேண்டியதுதானே . கொஞ்சம் கடுமையான நடவடிக்கை தேவை . எதிர் கட்சி உறுப்பினர்கள் கேள்வி மட்டும் கேட்பார்கள். பதில் சொல்லும்போது கத்தி கூச்சல் போடுவார்கள். எவ்வளவு நாட்கள்தான் இவற்றை சகித்து கொண்டிருப்பது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை