உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு

ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு

புதுடில்லி : தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போது எடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா, 'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்ட தேர்தல்களுக்கு ஏற்ப ஓட்டுப்பதிவு முதல், ஓட்டு எண்ணிக்கை வரையிலான வீடியோ, புகைப்படக் காட்சிகள் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் கமிஷன் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

கட்சிகள் வழக்கு

பொதுவாக தேர்தல் முடிவுகளை எதிர்த்து, 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ஒருவேளை, 45 நாட்களுக்குள் வேட்பாளர்கள் வழக்கு தொடராவிட்டால் சம்பந்தப்பட்ட வீடியோவை அழித்து விடும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்தலில் பதிவான 'சிசிடிவி' காட்சிகளை வேட்பாளர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.இதையடுத்து 'சிசிடிவி' காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.

புதிய விதிமுறைகள்

இந்த நிலையில், தேர்தலில் பதிவாகும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை 45 நாட்கள் மட்டும் மாநில தேர்தல் அதிகாரிகள் பாதுகாத்தால் போதும் என்று, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள், மே 30ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 08:56

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நேர்மை என்ற ஒன்று இல்லாதவரை நீங்கள் என்ன செய்தாலும் பலனளிக்கப்போவதில்லை .இந்தியாவை பொறுத்தவரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 08:29

முடிவுகள் எதிர்பார்க்கும் வண்ணம் சாதகமா அமைய வரைக்கும் ஒட்டு எண்றதை பத்தியே யோசிக்கறதில்லையே.


CBE CTZN
ஜூன் 21, 2025 07:58

வாக்கு பதிவு முடிந்து வாக்குகளை எண்ணவே 30 முதல் 60 நாட்கள் காத்திருக்கும் நிலையில் 45 நாட்களில் யார் வழக்கு பதிவு செய்வார்கள்... சில சமயங்களில் ஒன்றிரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடக்கும் வாக்கு பதிவுகளின் போது இந்த 45 நாட்கள் விதிமுறை எப்படி பொருந்தும்... தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நிறைய தகவல்கள் தெரியும்... இருந்தாலும் மெத்தனமாக்க சிந்திக்காமல் 45 நாட்கள் என கூறியிருப்பது நகைப்புக்கு இடமளிக்கிறது


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 06:55

அப்படியென்றால் 45 நாட்களுக்குள் எத்தனை பேர் கள்ள ஒட்டு போட்டார்கள் போன்ற விபரம் சரிபார்க்கப்படலாம்... அரசிடம் இருக்கும் ஆதார் விபரங்களுடன் ஓட்டுப்போட்டவர்கள் சரியான நபர்தானா என்பதை சரிபார்க்கலாம்.