உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.டில்லியில் காவிரிமேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவில், ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திறந்து விட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 22, 2025 21:25

சாமி (நீதிமன்றம்)வரம் கொடுத்தாலும் பூசாரி (மத்திய பாஜக அரசு)கொடுக்க விட மாட்டாரே!


theruvasagan
மே 22, 2025 22:11

அறிவாளியே. கர்நாடகாவில் ஆட்சி செய்வது கான்கிராஸ். அவர்கள்தான் காவிரி நீரை திறக்க வேண்டும் . இதில் மத்திய அரசே எங்கே வருகிறது.


ديفيد رافائيل
மே 22, 2025 20:08

கர்நாடகாவில் வெள்ளம்... வேற வழியின்றி தண்ணீர் திறக்குறானுங்க.


தாமரை மலர்கிறது
மே 22, 2025 19:46

மழை பெய்யும்போது கர்னாடகா அணையை மூடிவைக்க முடியாது. திறந்து விடுவது நல்லது. தடுப்பு அணைகள் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் அமைக்கப் பட்டு இருந்தால், இந்த தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் இப்போது கடலில் கலந்து வீணாகபோகிறது . வறட்சி காலத்தில் கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்டால், அவர்களால் கொடுக்க இயலாது.


D Natarajan
மே 22, 2025 17:34

தண்ணீர் தராவிட்டால் உச்ச நீதி மன்றம் என்ன செய்யும். ஒன்றும் செய்யாது , செய்யவும் முடியாது. காவிரி மேலாண்மை ஒரு தண்டம். மழை பெய்து, அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும்


MUTHU
மே 22, 2025 20:37

இந்த மன்றங்கள் பதில் சொல்பவனிடம் மட்டுமே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்கும். ஒன்றும் சொல்லாதவனிடம் தனது பவர் செல்லாதவனிடம் தானும் ஒன்றும் சொல்லாது.


chennai sivakumar
மே 22, 2025 17:07

இயற்கை அன்னை தருவது ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளப் படும். ஹி ஹி ஹி


Madhavan Kandasamy
மே 22, 2025 16:33

காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடாவுக்கு ஆதரவா? சரியாக மழைக்காலத்தில் 40 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடச் சொல்லுது..??? மழைக்காலத்தில் அணையை பாதுகாக்க திறந்துவிடப்படும் உபரி நீரையும் சேர்த்து கணக்குப்பண்ணும் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவு சாதகமாகிப்போகுமே


Kulandai kannan
மே 22, 2025 20:27

உபரி நீர் விவசாயத்திற்கு உதவாதா?


RG GHM
மே 22, 2025 16:28

பெங்களூர் மழை ல மிதக்குது. தானா தண்ணீர் வரும்


முக்கிய வீடியோ