உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலியான பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவு!: சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவுறுத்தல்

போலியான பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவு!: சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும், குழப்பத்தையும் விளைவிக்கும் வகையில் போலியான வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்; அது குறித்து 72 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக நம் நாட்டு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதுவரை 275க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. விசாரணையில் அவை அனைத்தும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் மொபைல் போன் வாயிலாக இல்லாமல், எக்ஸ் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் வாயிலாக விடுக்கப்பட்டன.

அச்சுறுத்தல்

இதுகுறித்து டில்லி 'சைபர்' குற்றப்பிரிவு போலீசார் எட்டு வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஐ.பி., எனப்படும் இணைய முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் சமூக வலைதள கணக்கு விபரங்களை வழங்கும்படி எக்ஸ் மற்றும் பேஸ்புக்கிற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தளத்தில், தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேச பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்கள் வெளியானால், தகவல் - தொழில்நுட்ப சட்டம் 2021ன்படி அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, போலி தகவல் குறித்து 72 மணி நேரத்திற்குள் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலி தகவல்களை பரப்பிய நபரின் அடையாளம் உள்ளிட்டவற்றை விசாரணை அமைப்புகளுக்கு வழங்கி உதவ வேண்டும்.

ஐ.டி., சட்டம்

மக்களை பாதிக்கும் வகையில், விமானங்களுக்கு வெடிகுண்டு புரளி போன்ற தவறான தகவல்கள் மீது சமூக வலைதளங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தவறினால் அவற்றிற்கு சமூக வலைதளங்களே பொறுப்பு. அவை மூன்றாம் நபரின் கருத்து என்று சொல்லி சமூக வலைதளங்கள் தப்பிக்க முடியாது.ஐ.டி., சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்கள் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாரதி
அக் 27, 2024 19:35

உண்மை. நன்மை. பத்திரிகைகளுக்கும் இதே விதியை கொண்டுவர வேண்டும்.


Lion Drsekar
அக் 27, 2024 12:21

யார் காதிலும் இந்த செய்தி போய்சேராது,. காரணம் இது நாட்டின் நன்மைக்காக வெளிவந்த செய்தி, இதே நேரத்தில் மற்றொன்றையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அதாவது மிகப்பெரிய பதவியை துச்சமென , ஒருமையில் பேசுவதும், தரம் தாழ்த்தி பேசுவதும், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களே அவர்களுக்கு ஒத்துவராத, பிடிக்காத மேல்நிலையில் இருக்கும் மிகப்பெரிய அளவில் பதவி வகிக்கும் நபர்களை நாளுக்கு நாள் கீழ்த்தரகாம விமர்சிப்பதும் அதை வைத்து ஊடகங்களில் காரசார விவாதம் நடத்தி மேலும் அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்கள் இதையும் நீக்க அறிவுறுத்தவேண்டும், இல்லையென்றால் அந்த பதவிக்கான மரியாதையே இல்லாமல் போய்விடும், வந்தே மாதரம்


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 10:33

இந்த வலைத்தளங்கள் இருப்பதினால் என்ன நன்மை ? சீனாவை பார் என்று குரல் கொடுக்கும் மக்களை அதிகம் கொண்ட நாடு நம் நாடு , அவர்களை போல இந்த வலைத்தளங்கள் முடக்கப்படவேண்டும் என்றும் செய்து காட்டலாம்


jayvee
அக் 27, 2024 08:48

திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் கணக்குகளை முடக்கினாலே இந்த பிரச்சனை குறையும்


சுந்தர்
அக் 27, 2024 02:04

வச்சான்டா ஆப்பு. இத்தனை நாள் இந்த வலைத்தளங்கள் ஏமாற்றி வந்தன. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது இவை தாங்களாகவே முன்வந்து களை எடுக்க வேண்டும். நமது அனைத்து துறைகளும் பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். Enforce strict action. No compromise on Nation's Security.


முக்கிய வீடியோ