உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்த உத்தரவு

ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், 'பயோ மெட்ரிக்' அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் எழுதியுள்ள கடிதம்: 'பயோமெட்ரிக்' எனப்படும், கண் கருவிழிப்படலம் மற்றும் கைவிரல் ரேகை புதுப்பிப்பு பணியை பள்ளிகளில் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 - 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியம். 17 கோடி ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கும் பணிகள் நிலுவையில் இருக்கின்றன. பள்ளி குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல் களை புதுப்பிக்காவிட்டால், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். குறிப்பாக நீட், ஜே.இ.இ., சி.யு.இ.டி., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பெயர்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகளை முடிக்க, பள்ளிகளில் முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Samayamuthu
ஆக 29, 2025 08:27

ஆதார் மற்றும் பல அரசு விதி முறைகள் அப்ப அப்ப மாதம் மாதம் மாறிக் கொண்டே இருக்கிறது. இது ஏன்? என்று தெரியவில்லை


முனுசாமி ஜீ
ஆக 29, 2025 07:43

இந்த ஏற்பாடு சிறப்பு யாரும் எங்கு என்று அலையவேண்டாம். விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும். யோகா ஆசிரியர் சென்னை வடபழனி


Ravi Sankar
ஆக 28, 2025 15:32

பெரியவர்களூககும் ஆதார் புதுப்பிப்பு முகாம் பள்ளிகளில் நடத்தினால் நன்றாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை