உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்

பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.தாக்குதலை தொடர்ந்து ஏப். 24 முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது. தற்போது கடநத 5 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 600 விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருக்கின்றன. இந்த விமானங்கள் சர்வதேச நாடுகளுக்கு செல்பவையாகும். இது தவிர, பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 120 விமானங்கள் எரிபொருள் நிரப்ப ஏதுவாக கூடுதல் நிறுத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 30, 2025 12:16

தரைவழி மார்க்கத்தையும் அழித்து, பாகிஸ்தான் நாட்டையும் அழித்து, ஒரு புதிய நாட்டை நாம் உருவாக்கவேண்டும்.


Sudha
ஏப் 30, 2025 11:37

ஒண்ணுமே புரியல இந்தியாவிலிருந்து அதாவது சென்னை பெங்களூர் மும்பை யிலிருந்து கிளம்பினாள் கூட லாஹூர் வழியா போகணுமா? டெல்லி கொல்கத்தா விமானங்கள் ஆப்கானோ அசர்பைஜான் போக முடியாதா? 60 வருடமா இது பற்றி யோசிக்க வில்லையா?


சமீபத்திய செய்தி