உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம்

பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் விவகாரம் குறித்து , பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் இல்லத்தில் இன்று(ஏப்.23) மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.புதுடில்லியில் உள்ள பிரதமர் அரசு இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியின் தலைமையில்,பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய காஷ்மீர் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, உளவு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணபை்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

thehindu
ஏப் 23, 2025 22:27

தேவையில்லாமல் நாட்டில் பீதியை கிளப்பவேண்டிய அவசியமில்லை


thehindu
ஏப் 23, 2025 22:04

நாட்டில் உள்ள மக்களையெல்லாம், எதிர்கட்சி அமைச்சர்கள் தலைவர்களையெல்லாம் பல வருடங்களாக குறிவைத்து வந்த அமைச்சரவையை ஒரு நான்கைந்து பேர் சேர்ந்து இப்படி வீதிக்கு கொண்டுவந்துவிட்டார்கள் . போக முப்படைகளையும் வைத்து நாட்டைஉலுக்கிய போகும் இடமெல்லாம் முப்படைகளுடன் சென்ற சா மோடியையும் வைத்து முப்படைகளையும் வீதிக்கு கொண்டுவந்துவிட்டார்கள். இதற்க்கு மேலும் இந்த அரசுக்கு என்ன தோல்வி வேண்டும் ?.


சிட்டுக்குருவி
ஏப் 23, 2025 21:41

சும்மா ஒரு நூறு இருநூறு மக்கள் கூடுமென்றாலே போலீஸ் பாதுகாப்பு போடுவதை பார்த்திருக்கின்றோம் .ஆனல் ஒரு ஆயிரம் மக்கள் கூடுமிடத்தில் ,அதுவும் தீவிரவாதம் உள்ள இடத்தில பாதுகாப்பே இல்லாதது அதிர்ச்சி அளிக்கின்றது. இது மாநில அரசு ,மத்திய அரசு ,பாதுகாப்புத்துறை இவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதததையே காட்டுகின்றது .இனி வரும் காலங்களில் இதை தவிர்ப்பார்கள் என்றே நம்புகிறோம் .


Sudha
ஏப் 23, 2025 20:54

அதெல்லாம் சும்மா, காது புளிச்சு போச்சு, கூட்டத்திற்கு 3 இலக்க நம்பர் கொடுத்தால் , சீக்கிரமே 999 தொட்டு விடும்


பெரிய குத்தூசி
ஏப் 23, 2025 20:35

தயவுதாட்சன்யம் பார்க்காமல் நாட்டின் இறையாண்மை கருதி பிரிவினை வாதத்தை வளர்பவர்களை clear செய்யவும். ஐநா சபைக்கும் கூவும், நோ ஒறறீஸ். இப்போ ஐநா டம்மி பீஸ் ஆச்சி. அமெரிக்கா ஐரோப்பா நாடுகளுக்கு ராஜதந்திரமாய் சமாளிக்க ஜெய்ஷ்ங்கர் இருக்கிறார் பார்த்துக்கொள்வார். நம் வீட்டுக்குளேயே இருக்கற எதிரிகளை clear செய்தாலே நம் எதிரிகள் திக்குமுக்காடி காணாமல் போய்விடுவார்கள். ஜெய்ஹிந்த்


Ramesh Sargam
ஏப் 23, 2025 20:19

பாகிஸ்தான் மீது இந்தியா உடனே ஒரு துல்லிய தாக்குதல், அதாவது ஒரு தீவிரமான surgical strike நடத்துவதை விட்டு, வெறும் கண்டனம், எச்சரிக்கை விடுப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.


GMM
ஏப் 23, 2025 20:12

இந்தியா குடியுரிமை பெற்ற NCC மாணவர்கள், பொது பணியில் உள்ளவர்கள், அக்னி வீர், மாநில போலீஸ்காரர்கள் அனைவருக்கும் ஒரு குண்டு உள்ள விசேஷ கைத்துப்பாக்கி உரிமம் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகள் படுகொலையை எதிர்க்கும் நாடுகள் சேர்ந்து, ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான், வங்க தேச, ஆப்கான் தீவிர வாதி முகாம்கள் அழிக்க முடியும். மதம் மாறிய இஸ்லாமியர்கள் மீது பிறப்பால் வளரும் இஸ்லாமியர்கள் நம்பிக்கை குறைந்து விட்டது. இது தாக்குதலுக்கு தக்க நேரம்.


Ramesh Sargam
ஏப் 23, 2025 20:05

பாகிஸ்தான் மீது தாக்குதல் தவிர வேற எதுவும் சிறந்த முடிவாக இருக்காது. இந்த காலத்தில் மஹாத்மா காந்தியின் அஹிம்சை வேலைக்கு ஆகாது. அடிச்சா, திருப்பி அடி. அணைச்சா, திருப்பி அணை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை