உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பது, தாங்கள் பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு சொல்லும் செய்தியாகும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா தொழிலதிபராக உள்ளார்; அவ்வப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.

பாகுபாடு

ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இது குறித்து, ராபர்ட் வாத்ரா கூறியதாவது:பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல். இது, மூர்க்கத்தனமான நடவடிக்கை.தற்போது நாட்டில் உள்ள அரசு, ஹிந்துத்துவாவை பற்றியே பேசுகிறது. இதனால், சிறுபான்மையினர் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பலகீனமடைந்துள்ளதாக கருதுகின்றனர்.பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது, அடையாள அட்டைகளை சரிபார்த்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தனர் என்று பார்க்க வேண்டும்.ஏனென்றால், இந்தியாவில் தற்போது ஹிந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு உள்ளது.

தாக்குதல் நடக்காது

ஹிந்துக்களாலேயே நமக்கு தொந்தரவு என்று முஸ்லிம்களை சிந்திக்க வைத்து விடுகிறது. அதனால் தான், அடையாள அட்டையைப் பார்த்து கொன்றுள்ளனர்.தாங்கள் பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதுவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த தாக்குதல் சொல்லியுள்ள செய்தி.சிறுபான்மையினர் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக நினைக்கின்றனர். நாம் பாதுகாப்பாகவும், மதச்சார்பு இல்லாமலும் இருக்கிறோம் என்ற உணர்வை நாட்டின் தலைமை ஏற்படுத்த வேண்டும். அப்போது, இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கண்டனம்

ராபர்ட் வாத்ராவின் பேச்சுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது:சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, பயங்கரவாத செயலுக்கு வெட்கமில்லாமல் ஆதரவளிக்கிறார். அந்த செயலை கண்டிக்காமல், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டிக்காமல், இந்தியா மீது பழி போடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது:நாடே சோகத்தில் இருக்கும்போது, சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது. காங்கிரசின் இந்த மனநிலை தான், நாட்டில் வெறுப்புணர்வை விதைத்துள்ளது, சனாதன தர்மத்தால், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடு ஒற்றுமையாக உள்ளது.பிரதமர் மோடி தலைமையில், இந்தியா தொடர்ந்து வலுவாகவும், வெற்றிகளையும் பெறும். பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் நிச்சயம் அழிக்கப்படுவர். வெளிநாட்டில் உள்ள எதிரிகளும், நம் நாட்டில் முஸ்லிம்களை துாண்டி விடுபவர்களும் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 97 )

Bala
மே 10, 2025 22:44

இஸ்லாமியர்கள் என்றைக்குமே நல்லவர்கள்தான். அவர்களை தவறான பாதைக்கு தூண்டிவிடுபவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் இந்தாளிடம் நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சொன்னார்களா ? அதற்கான ஆதாரத்தை இவர் வெளியிடட்டும். இல்லாவிட்டால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற ஆட்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


V.Ravichandran
ஏப் 30, 2025 12:43

இவனையும் , இவன் குடும்பத்தையும் NSA வில் கைதுசெய்ய வேண்டும் .


sankaranarayanan
ஏப் 26, 2025 21:20

இவர் அளவுக்கு மீறி பேசுகிறார் .அறிக்கை விடுகிறேன் என்பது என்ன நினைப்பு என்றே தெரியவில்லை. ஒரு தொழிலதிபராக இருப்பதை விட்டுவிட்டு அரசியலில் மயங்கி நுழைக்கிறார். மூக்கு அறுபட்டுபோகும் .ற்கனவே இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன வாயை தையல்போட்டுக்கொண்டு இருந்தால் இவருக்கு நல்லது இல்லையேல் இவரும் தீவிரவாதிகள் கும்பலுடன் சேர்க்கப்படுவார்.


Kannan
ஏப் 26, 2025 17:19

காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகளின் இந்து துவேசம், வெறுப்பு, போலி மத சார்பின்மை, இஸ்லாமியரை ஆதரிப்பது போல் நடிப்பது போன்ற மிக மோசமான நடவடிக்கைகளே பெகல்காம் போன்ற நீச்ச செயல்களுக்கு காரணம்.....


Karthikeyakumar G
ஏப் 26, 2025 12:33

நாட்டு பற்றை விட மதப்பற்று அதிகமாக உள்ளது. எந்த மதமாக இருந்தாலும் நாட்டு பற்றால் தான் ஒன்று பட முடியும். நாட்டில் நடந்த வன்கொடுமைக்கு காரணம் கூறுவது மடத்தனம். இந்தியன் என்ற உணர்வு வேண்டும். ஜெய் பாரத் .


Natarajamoorthy
ஏப் 26, 2025 08:57

இது மாதிரியான சந்தர்ப்பங்களில் தேச விரோதிகளின் சுயரூபம் வெளிப்படுகிறது.


K V Ramadoss
ஏப் 25, 2025 20:00

இப்படிப்பட்ட நாட்டுத்துரோகிகளை நாடு கடத்த வேண்டும் .


Ethiraj
ஏப் 25, 2025 12:55

Vadra must donate all his wealth lavishly to muslims to prove he is secular


sugumar s
ஏப் 25, 2025 12:38

this anti national guy needs to be arrested


Ragupathi
ஏப் 25, 2025 12:20

நான் இதுவரை யாரையும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி எழுதியதில்லை ஆனால் அப்படி திட்டி எழுதனும் போல இருக்கு. அனைத்தையும் மூடிட்டு சும்மா உட்காரு 200 ரூபாய் உடன்பிறப்பே.


முக்கிய வீடியோ