உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடிகொடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்து என்ன மாதிரி பதிலடி கொடுப்பது என்பது குறித்து டில்லியில் பரபரப்பாக ஆலோசனை நடக்கிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சருடன், முப்படை தளபதிகள் சந்தித்து பேசினர். உள்துறை அமைச்சகத்திலும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிவேதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால், டில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என பி.டி.ஐ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஏப் 30, 2025 02:22

இந்தியாவின் பாதுகாப்பு அரணாக ஆர் எஸ் எஸ் விளங்குகிறது.


Gnana Subramani
ஏப் 29, 2025 23:45

ஆர் எஸ் எஸ் படை பாகிஸ்தானுக்கு அனுப்ப சொல்லி கேக்க போய் இருக்கலாம்


vivek
ஏப் 30, 2025 02:48

ஏல உனக்கு எவளோ சமச்சீர் அறிவு


N Sasikumar Yadhav
ஏப் 30, 2025 03:28

அதெல்லாம் அந்த தேசபக்தர்களுக்கு தெரியும் அதனால நீங்க எப்பவும்போல விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு முட்டு கொடுக்க போங்க


சமீபத்திய செய்தி