உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முடிவு என்ன?

வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முடிவு என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அந்நாடு தடை விதித்து உள்ளதால், மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்க போவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனமும் இது குறித்து விளக்கமளித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அந்நாட்டுடன் உறவு துண்டிப்பு, விசா ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தானும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது.

மாற்றுப்பாதை

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அந்நாடு தடை விதித்து உள்ளது. இதனால், வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து கிளம்பி வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். வான்வெளி மூடப்படுவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது நாங்கள் எப்போதும், எங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அசவுகரியம்

அதேபோல், இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வான்வெளியை பாகிஸ்தான் திடீரென மூடியதால், சில சர்வதேச விமானங்கள் பாதிக்கப்படக் கூடும். இதனால் ஏற்படும் அசவுகரியங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். பயணிகளுக்கு உதவவும், விரைவாக செல்லவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. விமான பயணத்தின்தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும், உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம். அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம். உங்கள் பொறுமையை நாங்கள் மதிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Saravanaperumal Thiruvadi
ஏப் 26, 2025 13:33

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலை அடுத்து டெல்லி திரும்பும் பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் வசூல் செய்தது இந்த விமான நிறுவனங்கள் இப்போ எவ்வளவு வாங்குவாங்களோ தெரியவில்லை. ஒன்றிய அரசும் இந்த கட்டண கொள்ளையை கண்டு கொள்வதில்லை.


Sankar G
ஏப் 25, 2025 16:26

தண்ணீர் தருவது நிறுத்த வேண்டும்.


Saravanaperumal Thiruvadi
ஏப் 26, 2025 13:32

நிறுத்தியாச்சு என செய்தி கண்டேன்


Sundar
ஏப் 25, 2025 12:50

நாமதான் கும்மிடிப்பூண்டி தாண்டியது இல்லை... நமக்கு என்ன கவலை ப்ரோ?


sureshsmart is smart
ஏப் 25, 2025 00:47

ஒரு நாட்டின் வான்வெளி மீதான உரிமை என்பது, சர்வதேச சட்டங்களின் கீழ் அதன் பரந்த வான்வெளியை airspace நிர்வகிக்கும் உரிமையைக் குறிக்கிறது. இது பன்னாட்டு சிவில் விமானப்பாதை அமைப்பின் ICAO விதிகளின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு நாடும் அதன் நிலையான எல்லைக்குள் உள்ள வான்வெளியை கட்டுப்படுத்தும் முழு உரிமை கொண்டுள்ளது. பாகிஸ்தான் எப்படி வான்வெளியை இந்தியாவிற்கு மூட முடியும்? பாகிஸ்தான், தனது FIR Flight Information Region என்ற வான்வெளி பகுதியில் உள்ள விமானப்பாதைகளை இந்தியாவிற்கு மூட முடியும். இதைப் பல காரணங்களுக்காக செய்யலாம்: பாதுகாப்பு காரணங்கள் - போர், தாக்குதல், அல்லது உள்நாட்டு அவசர நிலை. அரசியல் எதிர்வினை - உதாரணமாக, இந்திய அரசின் ஒரு நடவடிக்கைக்கு எதிராக தற்காலிக நடவடிக்கையாக. அரசாங்க உத்தரவு - முக்கியமான தேசிய தருணங்களில். இதனால் ஏற்படும் விளைவுகள்: இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாகச் செல்ல முடியாது. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டி, அதிக எரிபொருள், நேரம் மற்றும் செலவு அதிகரிக்கும். சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்படும். -


Anantharaman Srinivasan
ஏப் 24, 2025 22:54

வான்வெளி என்பது பொதுவானது. அதை மூட இவர்கள் யார்.? சர்வதேச வான்வெளி போக்குவரத்து விதிமுறைகள் படி இவ்வாறு செய்ய முடியுமா..?


thehindu
ஏப் 24, 2025 22:32

மக்களிடம் அடிக்கும் கொள்ளை இன்னும் அதிகமாகும்


guna
ஏப் 25, 2025 07:47

200 ரூபாய் சொம்புகூ என்ன கவலை


Mr Krish Tamilnadu
ஏப் 24, 2025 22:11

வான்வெளியை கூட கண்காணிக்க முடிந்த அவர்களுக்கு, எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் பற்றி தெரியாது என்பது மிகப் பெரிய பொய்..பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைபவர் பற்றி நிச்சயம் தெரியும்.


Rahul Palanivel
ஏப் 27, 2025 02:55

அடேய் முட்டா்களாக பேசாதே...ஒரு சுற்றுலா பயணியாக கூட வந்து பண்ணிருப்பான் அவன் இந்தியாவின் நண்பனிடம் பழகி... அதற்கு தான் முழு தடையும் விட்டாச்சு... டாேன்டீ ஒர்ரி bro


ganapathy
ஏப் 24, 2025 21:47

நாமும் நமது வான்வெளியை பாக் விமானங்களுக்காக மூடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை