பாக்., தோல்வி அடைந்த நாடு!
அரசியல் ரீதியாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை என்று வரும் போது, நாங்கள் ஒரே பாதையில் ஒருமித்த கருத்துடன் பயணிக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தான், முற்றிலும் தோல்வி அடைந்த நாடு.அசாதுதீன் ஓவைசி, தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tr6arhon&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரிக்க வேண்டும்!
உலக அழகி போட்டியில் பங்கேற்க ஹைதராபாதுக்கு வந்த, பிரிட்டனைச் சேர்ந்த அழகி மில்லா மாகி, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாகக் கூறி, போட்டியில் இருந்து விலகி உள்ளார். இது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இது குறித்து, தெலுங்கானா காங்., அரசு விசாரிக்க வேண்டும்.கே.டி.ராமா ராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்டிர சமிதியாரை திருப்திபடுத்த முயற்சி?
பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை, ஆப்பரேஷன் புளூ ஸ்டார் என, காங்., நிர்வாகி அல்கா லம்பா குறிப்பிடுகிறார். இதை அவர் தவறுதலாக கூறவில்லை. வேண்டுமென்றே கூறியிருக்கிறார். யாரை திருப்திப்படுத்த அல்கா முயற்சிக்கிறார்?செஷாத் பூனாவாலா, தேசிய செய்தித் தொடர்பாளர்,பா.ஜ.,