உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தாக்கினால் வெடிக்க போவது.. அணு ஆயுத போர்: பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்

இந்தியா தாக்கினால் வெடிக்க போவது.. அணு ஆயுத போர்: பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்

புதுடில்லி,:''எங்களிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன. அவை இந்திய நகரங்களை நோக்கி ஏவ தயாராக உள்ளன. இந்தியா எங்களை தாக்கினால், அணு ஆயுதப் போர் வெடிக்கும்,'' என, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்தவர்களில், 26 ஹிந்துக்களை தேர்ந்தெடுத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டது. முதல் முறையாக அப்பாவி பொதுமக்களை, குறிப்பாக ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களும், நாடு முழுதும் உள்ள முஸ்லிம் அமைப்பினரும் முதல் முறையாக ஒருமித்த குரலில் இந்த கொடுமையை பலமாக கண்டித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களையும், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். பிரதமர் மோடியும் நிர்வாக ரீதியாக சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து; அட்டாரி - வாகா எல்லை மூடல்; பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு; விசா மறுப்பு; பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூடல் போன்றவை இதில் அடங்கும். இதை அடுத்து ராணுவ தாக்குதல் நடக்கும்; அது போராக வெடிக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் பாகிஸ்தான் அரசும், அரசியல்வாதிகளும் பதற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவை மிரட்டும் விதமாக தினமும் ஏதாவது கூறி வருகின்றனர். முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ, 'சிந்து நதியில் நீரை நிறுத்தினால், இந்தியர்களின் ரத்தம் ஆறாக பாயும்' என பேசினார். பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி நேற்று ஒரு பேட்டியில் மிரட்டலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார்.''பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள், ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் காட்சிப் பொருட்களாக வைத்திருக்கவில்லை. ஏவுகணைகளும், 130 அணு குண்டுகளும் இந்திய நகரங்களை குறிவைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.''இந்தியா எங்களை தாக்கினால், அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்பதை உணர வேண்டும்,” என, அப்பாஸி கூறினார்.

அரபிக்கடலில் கடற்படை ஏவுகணை ஒத்திகை

இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள், அரபிக்கடலில் நேற்று ஏவுகணை தாக்குதல் ஒத்திகை நடத்தின. எதிரியின் போர்க் கப்பல் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில், பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி ஒத்திகை நடத்தப்பட்டது.நம் ஏவுதளம், நடைமுறைகள், படை வீரர்கள் நீண்ட துார துல்லியமான தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்தது.'எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த வகையிலும் நம் இறையாண்மையை காக்க கடற்படை தயாராக உள்ளது. எல்லா வகையான போருக்கும் தயார் நிலையில் உள்ளோம்' என நாட்டு மக்களுக்கு கடற்படை உறுதி அளித்துள்ளது. ஒத்திகை தொடர்பான பல வீடியோக்களையும் கடற்படை வெளியிட்டுள்ளது.

அரசுக்கு ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் கூறுகின்றன. இந்நிலையில், கங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் கூறியுள்ளதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், உடனடியாக இதற்கு மத்திய அரசை பொறுப்பாக்கக் கூடாது.உதாரணத்துக்கு மேற்காசிய நாடான இஸ்ரேலை எடுத்துக் கொள்ளலாம். உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பு கொண்டதாக இஸ்ரேல் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அந்த நாட்டு மக்கள் உடனடியாக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை. அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.எந்த ஒரு நாட்டிலும் உளவு தகவல் என்பது, 100 சதவீதம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

thehindu
ஏப் 28, 2025 21:55

மோடியின் எஜமானர்களான அதுவும் உலகின் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும்தான் அவர்கள் வேலை செய்துள்ளார்கள் . அதனால் இனி உலகில் யாருமே பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மோடிக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள் . அந்நிய மோகத்தில் உள்ள இந்தியர்களும் கூட ஆதரிக்க மாட்டார்கள். மோடியின் கூஜாக்கள்தான் ஆதரிக்கவேண்டும்


RAMESH
ஏப் 29, 2025 06:40

இஸ்ரேல் ஹமாஸ் பன்றிகளை பழி தீர்த்தது போல் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்...அதை இந்த போலி இந்து போர்வையில் இருக்கும் தீவிரவாதி பன்றி புரிந்து கொள்ள வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 13:51

இந்தியாவில் மத சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் ன்னு அப்பப்போ குத்திக்காட்டுற அமெரிக்கா, ஐரோப்பா எப்படி எஜமானர்களாக இருக்க முடியும்? கொஞ்சம் லாஜிக்கோட உளறணும் ....


Keshavan.J
ஏப் 28, 2025 21:54

இந்த முட்டாளுங்க அணு ஆய்தம் ஒரு லட்சுமி வெடி என்று நினைப்பு. ஒரு வெடி இந்தியா மீது விழுந்தால் 25% நாசமாகும், ஆனால் இந்தியா பதிலுக்கு இரண்டு அல்லது மூன்று அணு ஆய்தம் விட்டால் பாக்கிஸ்தான் இருக்காது. அப்படியே இந்தியாவின் பெரிய பாகம் அழிந்தாலும். சீனா, ரஷ்யா அமெரிக்கா பாகிஸ்தானை அழித்து விடும் ஏன் என்றல் அவர்களுக்கும் எதிர் காலத்தில் பாக்கிஸ்தான் ஒரு ஆபத்தான நாடாக இருக்கும்.


Krish
ஏப் 28, 2025 20:39

அந்தப்பக்கம் பொய் விளையாடுடே தம்பி


என்றும் இந்தியன்
ஏப் 28, 2025 17:32

முஸ்லிம்களும், நாடு முழுதும் உள்ள முஸ்லிம் அமைப்பினரும் முதல் முறையாக ஒருமித்த குரலில் இந்த கொடுமையை பலமாக கண்டித்துள்ளனர்???அப்படின்னா இப்போ தான் அவர்கள் மனிதர்களாக மாறியிருக்கின்றனர் . மிக்க நல்லது


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 17:23

ராணுவ தளபதியே இருக்குமிடம் தெரியவில்லை. எங்கோ தப்பி ஓடிவிட்டார் என்கிறார்கள். இந்த சில்லறை கேசு உதார் விடுது.


ராமகிருஷ்ணன்
ஏப் 28, 2025 17:04

வாஜ்பாயை விட பல மடங்கு வீரியமான தலைவர் மோடிஜீ. சின்ன பசங்க மாதிரி பேசாதே. நீயும் உன் குடும்பமும் வெளிநாட்டுக்கு ஓடி விடுங்க உயிரை காப்பாற்றிக் கொள். பயத்தில் செத்துவிடாதே


Santhakumar Srinivasalu
ஏப் 28, 2025 14:31

இவனை முதலில் சுட்டு தள்ளுங்கள்


ram
ஏப் 28, 2025 14:06

இங்கு இருக்கும் திருமா, சீமான், சுந்தரவில்லி ஆட்கள் போல பண்டரிஸ்தான் அமைச்சரும் பேசுவது நகைசுவையாக உள்ளது. ஏற்கனவே அவனுக ராணுவ அதிகாரிகள் வீரர்கள் ராஜினாமா செய்து விட்டு ஓடி விட்டார்கள், மருத்துவ பொருட்கள் அங்கு கிடைக்கவில்லை, ஆறுகள் வறண்டு போய் விட்டது, ராணுவ உயர் அதிகாரிகள் பேமிலி லண்டன் அமெரிக்கா என்று ஓடி விட்டார்கள், பிட்சை போடுவதற்கு எவரும் தயாராக வில்லை இதில் அணுகுண்டு போட போன்றன. இங்கு இருக்கும் திருட்டு திமுக அண்ட் அவர்கள் அல்லக்கை ஆட்களை venal அங்கு அனுப்பி வைக்கிறோம் அவர்களை use பண்ணிக்கோ.


Rajarajan
ஏப் 28, 2025 12:23

பா.ஜ.க. நல்ல கட்சியோ, இல்லையோ, அது அவரவர் பார்வைக்குட்பட்டது. ஆனால், பொதுவாக, இப்படி ஒரு கட்சி இந்தியாவில் இல்லையெனில், பாகிஸ்தான் என்ன ஆட்டம் போடும்.


kannan sundaresan
ஏப் 28, 2025 11:47

அமைச்சரே, சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை