UPDATED : மே 02, 2025 08:30 PM | ADDED : மே 02, 2025 08:29 PM
புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டை சேர்ந்த பல சமூக வலைதள பக்கங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் தகவல்களை வெளியிடுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09p7jh8n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் பக்கத்தையும் மத்திய அரசு முடக்கி உள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய அரசின் உத்தரவின் பேரில் பாக்., பிரதமர் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.