உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரமற்ற சீன தளவாடம் தள்ளாடிய பாக்.,

தரமற்ற சீன தளவாடம் தள்ளாடிய பாக்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாக்., இடையே நடந்த சண்டையில், 'ஸ்கால்ப்' ஏவுகணைகள் மற்றும், 'ஹேமர்' வெடிகுண்டுகளை பாக்., மீது, நம் ராணுவம் வீசியது.சீனாவிடம் இருந்து பாக்., வாங்கிய, எச்.க்யூ. 9பி மற்றும் எச்.க்யூ.16 வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் இந்த தாக்குதல்களை கண்டறிந்து தகர்க்க தவறிவிட்டன.இவை, குறைந்த உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு அழிக்க தவறிவிட்டன. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும், 81 சதவீத ஆயுதங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ராணுவ உபகரணங்களில் பாகிஸ்தான் சீனாவை சார்ந்தே உள்ளது.மேலும், ஜே 20 போன்ற தங்கள் நவீன போர் விமானங்களை பாக்.,குடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக இல்லை. இதனால், காலாவதியான தொழில்நுட்பங்களுடன் பாக்., தள்ளாடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raj S
மே 15, 2025 03:04

எங்க தமிழக விடிவெள்ளி சாதுர்யத்தால் தான் சீனா காலாவதியான ஆயுதங்களை பொறுக்கிஸ்தானுக்கு கொடுத்தார்கள்...


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 14, 2025 06:54

Reverse engineering பல்லிளித்த தருணம் ........


Kasimani Baskaran
மே 14, 2025 03:55

நவீன சீன உபகரணங்களும் கூட இது போன்ற தரத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நம்பி வாங்கும் நாடுகள் நாசமாகப்போவது உறுதி. சீனப்பொருள்களை வாங்குவது நிறுத்தினாலே போதும். எந்தப்பொருளாக இருந்தாலும் அது சீனாவில் உற்பத்தி செய்த பொருளாக இருந்தால் அதை கண்டிப்பாக வாங்காதீர்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை