26 நகரங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
ஜம்மு: காஷ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதி வரை, 26 இந்திய நகரங்களை குறி வைத்து, பாக்., ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள, காஷ்மீர் முதல் குஜராத் வரை உள்ள 4 மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை குறி வைத்து, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, உரி, பூஞ்ச், குப்வாரா, பெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்களை குறி வைத்து, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின், கரியான், ஜலால்பூர் ஜெட்டா நகரங்களை குறிவைத்து, இந்திய ராணுவம், ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.