உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் ஆவணங்கள் இன்றி நம் நாட்டில் வசிக்கலாம்

பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் ஆவணங்கள் இன்றி நம் நாட்டில் வசிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'குடியுரிமை திருத்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து 2024, டிச., 31 வரை இந்தியா வந்த ஹிந்துக்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி, இங்கேயே தொடர்ந்து வசிக்கலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நம் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அங்கு சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். அங்கு அவ்வப்போது தாக்கு தலுக்கு உள்ளாகும் இவர்கள், அகதிகளாக நம் நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். அவ்வாறு வந்து, இங்கு குடியேறும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்காக சி.ஏ-.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, 2019ல் பார்லிமென்டில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசால் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் கடந்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31க்குள், நம் நாட்டிற்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்த சூழலில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025ன்படி, சி.ஏ.ஏ.,வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து 2024, டிச., 31ம் தேதி வரை இந்தியா வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் இன்றி, நம் நாட்டில் தொடர்ந்து தங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 04, 2025 17:14

ஆவணமே இல்லேன்னா சிம்கார்டு, ரேசன் கார்டு, வங்கிக்கணக்கு, KYC புண்ணாக்கெல்லாம் எப்புடி குடுப்பீங்க?


Ess Emm
செப் 04, 2025 12:30

இப்படி அரசே அனுமதி கொடுப்பது என்பது வெளியில் போன ஒன்னானை வெட்டியில் பிடித்து விட்டது போலாகிவிடும். ஏற்கெனவே தீவிரவாதிகளின் அட்டஊழியம் அடங்கவில்லை. இவர்களுடைய ஓட்டுக்காக அரசியல் செய்வதேன்பது கை விட வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2025 06:55

ஆனால் அங்கிருக்கும் பெரும்பான்மையினர் தயவு தாட்சயணம் இன்றி வெளியேற்றப்படவேண்டும்


Mani . V
செப் 04, 2025 05:46

இதென்னடா மொள்ளமாரித்தனமாக இருக்கிறது? சிறுபான்மையினர் போர்வையில் தீவிரவாதிகள் தங்க மத்திய அரசு வெத்தலை, பாக்கு வைத்து அழைக்கிறது. ஆனால், மண்ணின் மைந்தர்களுக்குத்தான் நூற்றுக் கணக்கில் அடையாள அட்டையும், ஆதாரமும் தேவை.


spr
செப் 04, 2025 05:12

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்குமே குடியுரிமையை உறுதி செய்யும் ஒரு ஆவணம் அவசியமென்று எண்ணப்படும் காலகட்டத்தில், இது தவறான முன்னுதாரணமோ? குடியுரிமையை உறுதி செய்யாமல் இங்கே தங்குபவர் நான் இந்த நாட்டின் குடிமகன் அல்ல என்று இந்த நாட்டின் சட்ட விதிகளை மீறினால் அவர்களைத் தண்டிக்க வழியுண்டா?


சிட்டுக்குருவி
செப் 04, 2025 03:14

இதுபோன்ற செய்திகளை பத்திரிகைகளில் போடுமபோது அவர்களுக்கு எந்தவிதமான அடையாள ஆவணங்கள் வழங்கப்படும் ,தேர்தலில் வாக்களிக்கலாமா ? என்பதை போன்ற தகவல்களும் இருந்தால் மக்களுக்கு சந்தேகங்கள் எழாது .


Silva
செப் 04, 2025 05:18

Only they can stay.