வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவை பாகிஸ்தான் சந்திக்கும்.
மும்பை: கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், மஹாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் எப்போதும் தீவிர கண்காணிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரேவ்தண்டா கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று தென்பட்டது. ரேவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து, 2 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பு படையினர் படகை கண்டனர்.படகில் பாக்., அடையாளங்கள் இருந்ததாகவும், சிலர் கப்பலில் இருந்து இறங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.இதைத்தொடர்ந்து, ராய்காட் போலீஸ், வெடிகுண்டு நிபுணர்கள் குழு, கடற்படை மற்றும் கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு விரைந்தன. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக படகை அடையும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.படகு தென்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவை பாகிஸ்தான் சந்திக்கும்.